பச்சை மிளகாயின் நன்மைகள்

by Lifestyle Editor
0 comment

மிளகாய் ரத்த ஓட்டத்தினை அதிகரிக்க உதவுகிறது. உடல் முழுவதற்கும் ரத்த ஓட்டத்தினை சரி செய்கிறது. மிளகாயில் உள்ள கெப்சைசின் எனும் வேதிப்பொருள் இத்தன்மைக்கு அடிப்படை காரணமாகிறது.

தோல்களின் மீது தடவும் போது நரம்பு நுனிகளின் உணர்வினை மழுங்கச் செய்து ரத்த ஓட்டத்தினை அதிகரிக்கிறது. தோல் வியாதிகளான சொரியாசிஸ், நியூரால்ஜியா மற்றும் தலைவலி, மூட்டுவலி, ஆகியவற்றை போக்குகிறது.

ஜீரண மணடலத்தை சரியாக செயல்பட வைக்கிறது. பக்டீரியக்களுக்கு எதிராக செயல்புரிகிறது. உள்ளுக்கு சாப்பிடும் போது வயிற்றுவலி, வாயு கோளாறு போன்றவற்றை தீர்க்கும். ஜீரண சுரப்பிகளை சுரக்க தூண்டும். ஜீரண மண்டல நோய்களைப் போக்கும்.

மிளகாயை உணவில் சேர்த்துக் கொள்வதால் உடலில் எண்டார்ஃபின் என்கிற ஹார்மோன் சுரப்பு தூண்டப்படுகிறது. அதனால், மனதிற்கு ஓய்வு கிடைக்கிறது. மிளகாய் சேர்த்த உணவு, குடலை சுத்தப்படுத்தி உடலை லேசாக்கும் திறன் கொண்டது.

பச்சை மிளகாயில் ஆன்டி-பாக்டீரியா குணங்கள் அதிகம் நிரம்பியுள்ளது. இந்த குணத்தினால் உடலில் தொற்றுக்கள் ஏற்படாமல் உடலை காக்கிறது. அதுவும் முக்கியமாக சரும தொற்றுகள் ஏற்படாமல் உதவி புரிகிறது. பச்சை மிளகாயில் விட்டமின் ஈ அதிகமாக உள்ளது. இது சில சருமம் எண்ணெய் சுரப்பதற்கு உதவி புரியும்.

உணவில் காரத்திற்காக சேர்க்கப்படும் மிளகாய் உடலின் கொழுப்புகளை கரைக்கும் தன்மை கொண்டது. ஏனெனில் இதில் கொழுப்புகள் குறைவாக இருப்பதோடு, உடலில் இருக்கும் கலோரிகளையும் கரைத்துவிடும்.

Related Posts

Leave a Comment