பழிவாங்கிய பிரான்ஸ்! பிரித்தானியாவில் பல உயிர்களுக்கு ஆபத்து.., இக்கட்டான நிலைமையில் போரிஸ் ஜான்சன்

by News Editor
0 comment

பிரித்தானியாவுக்கு வரவேண்டிய கிட்டத்தட்ட 5 மில்லியன் தடுப்பூசி மருந்துகளை ஃபிரான்ஸ் அரசு தடுத்துவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

பிரித்தானிய அரசாங்க ஆதாரங்களின்படி, ஐரோப்பிய நாடான ஹொலாந்தில் உள்ள ஹாலிக்ஸ் தளத்திலிருந்து பிரித்தானியாவுக்கு வந்து சேரவேண்டுய தடுப்பூசிகளை பிரான்ஸ் தடுத்தது.

இதன் காரணமாக, பிரித்தானியாவின் தடுப்பூசி திட்டத்தை பராமரிப்பதற்காக ஃபைசர் தடுப்பூசி வழங்குவதில் பிரதமர் போரிஸ் ஜான்சன் கவனம் செலுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.

இது குறித்து பிரித்தானியாவை சேர்ந்த பெயர் மறைக்கப்பட்ட நபர் ஒருவர் கூறுகையில், “பிரெஞ்சுக்காரர்கள் எங்கள் தடுப்பூசிகளை பயன்படுத்த பாதுகாப்பானது இல்லை என்றெல்லாம் பொதுவெளியில் தவறாக கூறிவிட்டு, தற்போது அவற்றைத் திருடிவிட்டார்கள்.

இது ஒரு மூர்க்கத்தனமான விடயம், இது ஒரு கூட்டாளியின் நடவடிக்கை அல்ல, இதை அவர்களுக்கு மிகவும் தெளிவாகக் கூறப்பட்டது.

இவ்வாறு ஐரோப்பிய ஒன்றியத்தை விட்டு வெளியேறுவதை தடுப்பதன் மூலம் தடுப்பூசிகளை வரவிடாமல் நிறுத்துவதால், முதல் மற்றும் இரண்டாவது டோஸ் தடுப்பூசிக்காக காத்திருக்கும் மக்கள் உயிர்களை இழக்கும் சாத்தியம் இருக்கிறது.

பிரெஞ்சு அரசாங்கத்தின் இந்தச் செயல் “போர் செயல்” போன்றது என்று அந்த ஆதாரம் கூறியது.

Related Posts

Leave a Comment