திடீரென சரிந்த தங்கம் விலை! இனி ரூ.100 வாங்கமுடியுமாம்! அதிர்ச்சியில் உறைந்த மக்கள்; எப்படி வாங்கலாம்?

by News Editor
0 comment

கடந்த சில நாட்களாகவே தங்கம் விலை தொடர்ந்து சரிவை சந்தித்தாலும், ஒரு சில நாட்களில் அதிகரித்துகொண்டு தான் இருக்கிறது. இதையடுத்து, மாலையில் சிறிதளவு விலை குறைக்கப்பட்டது.

அதைத் தொடர்ந்து இன்று காலையிலும் விலைச் சரிவு நீடிக்கிறது. இதனால் நகை வாங்குவோர் மகிழ்ச்சியடைந்துள்ளனர். சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை உயர்ந்த நிலையில் இன்று கிராமுக்கு ரூ.3 குறைந்து ரூ.4,350.00 என விற்பனையாகிறது.

அதேபோல் சென்னையில் ஆபரணத் தங்கம் ஒரு சவரன் விலை ரூ.24 குறைந்து ரூ.34,800 என விற்பனையாகி வருகிறது.

ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை மும்பையில் ரூ.4,504 ஆகவும், பெங்களூருவில் ரூ.4,320 ஆகவும், ஹைதராபாத்தில் ரூ.4,320 ஆகவும், கேரளாவில் ரூ.4,323 ஆகவும், டெல்லியில் ரூ.4,535 ஆகவும், கொல்கத்தாவில் ரூ.4,560 ஆகவும், ஒசூரில் ரூ.4,362 ஆகவும், பாண்டிச்சேரியில் ரூ.4,361 ஆகவும் இருக்கிறது.

வெள்ளி விலை நேற்று ரூ.64.30 ஆக இருந்தது. இன்று அது ரூ.64.80 ஆக உயர்ந்துள்ளது. ஒரு கிலோ வெள்ளி 64,800 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. இந்த நிலையில், இந்தியாவில் நகை வியாபாரிகள் குறைந்தபட்சமாக ரூ.100 தங்கம் விற்பனை செய்ய தொடங்கியுள்ளனர்.

இனி வாடிக்கையாளர்கள் நகைக்கடை இணையதளத்தின் மூலம் ரூ.100-க்கு பொதுமக்கள் தங்கத்தை வாங்கலாம். கொரோனா பொதுமுடக்க காலத்தின் போது ஆன்லைனில் தங்கம் வாங்க பொதுமக்கள் ஆர்வம் காட்டியதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. குறைந்தபட்சம் ஒரு கிராம் அளவுக்கு பணம் கட்டியவுடன் தங்கம் டெலிவரி செய்யப்படும் என கூறப்படுகிறது.

Related Posts

Leave a Comment