செல்வ மழை பொழிய அஷ்ட லக்ஷ்மிகளையும் வீட்டிற்குள் அழைக்கும் அற்புத மந்திரம்

by News Editor
0 comment

அஷ்டலட்சுமிகள்
தான்ய லட்சுமி
தான்ய லட்சுமியின் அருள் மட்டும் நமக்குக் கிடைத்துவிட்டால் போதும். எப்போதும் நமது வீட்டில் உணவிற்காக பஞ்சம் என்பதே ஏற்படாது. காலம் முழுக்க பசி இன்றி நிம்மதியாக உணவு சாப்பிட்டு உயிர் வாழ முடியும்.
வீரலட்சுமி
நமக்கு ஏற்படும் துன்பம் மற்றும் இடர்பாடுகளை சமாளிக்கும் அளவிற்கு துணிவை அள்ளித் தருபவளே வீரலட்சுமி எனப்படுகிறார்.
கஜலட்சுமி
வாழ்விற்குத் தேவையான நற்பேறுகள் அனைத்தையும் அள்ளித் தருபவளே கஜலட்சுமி என்றழைக்கப்படுகிறார்.
சந்தான லட்சுமி
நமது வாழ்விற்கு அர்த்தம் சேர்க்கும் குழந்தை பாக்கியத்தை கொடுப்பவர் தான் சந்தானலட்சுமி.
விஜயலட்சுமி
நாம் செய்யக்கூடிய காரியங்கள் அனைத்தையும் வெற்றி பெறச் செய்பவள் தான் விஜயலட்சுமி.
வித்யா லட்சுமி
கல்வி அறிவு, நல்ல சிந்தனை இவை அனைத்தையும் அள்ளித் தருபவள் வித்யா லட்சுமி.
தனலட்சுமி
பணம் பொன் பொருள் இவை அனைத்தையும் அள்ளித்தருபவளே தனலட்சுமி.
அஷ்டலட்சுமிகளின் அருள் இருந்தால் மட்டுமே நம்மிடம் நிலைத்திருக்கச் செய்ய முடியும். இவ்வாறான அஷ்டலட்சுமிகளும் வீட்டிற்குள் நிரந்தரமாக வாசம் செய்ய இந்த ஒரு பரிகாரத்தை முறையாக செய்து வந்தாலே போதும்.
காலை எழுந்தவுடன் சுத்தமாக குளித்துவிட்டு பூஜை அறையின் முன் நின்று ஒரு எலுமிச்சை பழத்தை இரண்டாக அறிந்து அதன் இருபுறங்களிலும் கஸ்தூரிமஞ்சள் பூச வேண்டும். பின்னர் எலுமிச்சை பழத்தின் நடுவில் குங்குமம் வைத்து பொட்டு வைக்க வேண்டும். அதன்பிறகு காமாட்சி அம்மன் விளக்கை ஏற்றி
ஓம் ஸ்ரீம் க்லீம் ரீம் ரீம்
ஓம் ஸ்ரீம் க்லீம் ரீம் ரீம்
ஓம் ஸ்ரீம் க்லீம் ரீம் ரீம்
இந்த மந்திரத்தை மூன்று முறை சொல்லி கடவுளை வணங்கிய பின்னர் எலுமிச்சை பழத்தை நிலைவாசற் படியின் வலது புறம் ஒன்று, இடது புறம் ஒன்று என்று வைத்துவிட வேண்டும்.
மறுநாள் இந்த எலுமிச்சை பழத்தை மாற்றி இதேபோல் புதியதாக வைக்க வேண்டும். இவ்வாறு தொடர்ந்து செய்து வருவதால் அஷ்டலட்சுமிகளும் நிரந்தரமாக நமது வீட்டில் குடி கொண்டு அள்ள அள்ள குறையாத செல்வங்கள் பெருகிக் கொண்டே இருக்கும்.

Related Posts

Leave a Comment