லிப் டூ லிப் முத்தம்: சாண்டி மச்சினிச்சியை விளாசும் நெட்டிசன்கள்

by News Editor
0 comment

டான்ஸ் மாஸ்டர் சாண்டியின் மச்சினி சிந்தியா தன் அம்மாவுக்கு லிப் டூ லிப் முத்தம் கொடுத்த புகைப்படத்தை பார்த்த சமூக வலைதளவாசிகள் அவரை விமர்சிக்கிறார்கள்.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு அனைவரின் கவனத்தையும் ஈர்த்வர் டான்ஸ் மாஸ்டர் சாண்டி. தற்போது கோலிவுட்டின் பிசியான டான்ஸ் மாஸ்டர்களில் ஒருவராக இருக்கிறார்.

மேலும் அண்மையில் தான் அவர் இரண்டாவது முறையாக அப்பாவானார். சாண்டி தன் மச்சினி சிந்தியாவுடன் சேர்ந்து சூப்பராக டான்ஸ் ஆடி வீடியோக்களை சமூக வலைதளங்களில் வெளியிடுவார். அந்த வீடியோக்களுக்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு இருக்கிறது.

டான்ஸ் வீடியோக்கள் மூலம் சிந்தியா மிகவும் பிரபலமாகிவிட்டார். இந்நிலையில் தன் அம்மாவின் பிறந்தநாள் கொண்டாட்ட புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார் சிந்தியா.

அதில் ஒரு புகைப்படத்தில் தன் அம்மாவுக்கு லிப் டூ லிப் முத்தம் கொடுத்திருக்கிறார். அந்த புகைப்படத்தை பார்த்த சமூக வலைதளவாசிகள் கூறியிருப்பதாவது,

பிள்ளைகள் அம்மாவுக்கும், அம்மா பிள்ளைகளுக்கும் லிப் டூ லிப் முத்தம் கொடுப்பது திரையுலக பிரபலங்களிடம் அதிகரித்து வருகிறது. இதை பார்க்கவே நன்றாக இல்லை. ஏன் சிந்தியா இப்படி செய்கிறீர்கள்?. என்னமோ போங்க. அம்மாவுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் சொன்னதாக சொல்லுங்கள் என தெரிவித்துள்ளனர்.

Related Posts

Leave a Comment