ஆம்புலன்ஸ் சேவைக்கு உதவ ஸ்கொட்லாந்து விரையும் இராணுவ வீரர்கள்!

by News Editor
0 comment

தேசிய சுகாதார சேவை மீதான அழுத்தத்தைக் குறைக்க, இந்த வார இறுதியில் ஸ்கொட்லாந்தின் சில பகுதிகளுக்கு இராணுவ வீரர்கள் அனுப்பப்படவுள்ளனர்.

இவர்கள் அங்கு பரபரப்பாக செயற்படும் ஆம்புலன்ஸ் சேவைக்கு உதவுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஞாயிற்றுக்கிழமை முதல் அவசரமில்லாத ஓட்டுநர் பணிகளை மேற்கொள்வதற்காக 114 பணியாளர்களை வழங்குவதாகவும், இது இரண்டு மாதங்கள் நீடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதாகவும் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

கூடுதலாக 111 பணியாளர்கள், நடமாடும் கொவிட் சோதனை பணிகளை முன்னெடுக்க உதவுவார்கள் என சுகாதார செயலர் ஹம்ஸா யூசப் தெரிவித்துள்ளார்.

இராணுவம், ரோயல் கடற்படை மற்றும் ரோயல் விமானப்படை ஆகியவை நெருக்கடி தொடங்கியதில் இருந்து பிரித்தானியா முழுவதும் உதவ ஆயிரக்கணக்கான பணியாளர்களை அனுப்பியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Posts

Leave a Comment