மறைந்த நடிகை சில்க் ஸ்மிதா இப்படிப்பட்டவரா! துயரமான நாளில் எமோஷனலாக நடிகை ராதா வெளியிட்ட பதிவு!!

by News Editor
0 comment

80, 90ஸ் காலகட்டங்களில் பல முன்னணி நடிகர்களின் ஏராளமான திரைப்படங்களில் தனது எல்லையற்ற கவர்ச்சியால், அசத்தலாக நடிப்பால் மிரளவைத்து லட்சக்கணக்கான ரசிகர்களின் மனதை கட்டிப்போட்டவர் நடிகை சில்க் ஸ்மிதா. அவருக்கென பெரும் ரசிகர் பட்டாளமே இருந்தது. மேலும் அவரது நடிப்பை பாராட்டாதவர்களே கிடையாது.

இவரது காலத்தில் முன்னணி நடிகையாக இருந்த நடிகைகளே அவரது நடிப்பை, திறமையை பலமுறை போற்றி பேசியுள்ளனர். இவ்வாறு திரையுலகில் பெரும் பிரபலமாக இருந்த அவர் சில மன உளைச்சலால் திடீரென தற்கொலை செய்துகொண்டு உயிரிழந்தார். செப்டம்பர் 23 ஆம் நாள் அவரது நினைவு நாள். இந்த நிலையில் அவரை நினைவு கூறும் வகையில் நடிகை ராதா உருக்கமாக வெளியிட்ட பதிவு தற்போது வைரலாகி வருகிறது.

அந்த பதிவில் அவர், என் முதல் படத்தில் என்னுடைய அண்ணி கதாபாத்திரத்தில் சில்க் ஸ்மிதா நடித்திருந்தார். எனக்கு மட்டுமே நன்றாக தெரியும் அவர் கிளாமர் காட்சிகளை எவ்வளவு எளிதாக நடிப்பாரோ அதே அளவிற்கு எமோஷனல் காட்சிகளையும் அசால்டாக நடிக்கக் கூடியவர். இத்தகைய திறமையான நடிகையை சிறுவயதிலேயே இழந்தது வேதனை அளிக்கிறது என உருக்கமாக குறிப்பிட்டுள்ளார்.

Related Posts

Leave a Comment