முன்னணி நடிகைகளுடன் இணைந்து பிறந்தநாள் கொண்டாடிய மீனா.. வைரலாகும் புகைப்படங்கள்

by News Editor
0 comment

முன்னணி நடிகைகளுடன் இணைந்து நடிகை மீனா பிறந்தநாள் கொண்டாடிய புகைப்படங்கள் வெளியாகியுள்ளது. 

meena birthday

தமிழ் சினிமாவில் கண்ணழகி என ரசிகர்களால் வர்ணிக்கப்பட்டவர் நடிகை மீனா. 90-களில் முன்னணி நடிகையாக வலம் வந்த இவர், சிவாஜியின் ‘நெஞ்சங்கள்’ படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார்.  அதன்பிறகு ‘அன்புள்ள ரஜினிகாந்த்’ படத்தில் கொஞ்சம் பெரிய பெண்ணாக ரஜினியுடன் நடித்து அனைவரின் பாராட்டையும் பெற்றார்.

meena birthday

திரையுலகின் முன்னணி நடிகர்களான ரஜினி, கமல், விஜயகாந்த் என பல ஹீரோக்களுடன் நடித்துள்ளார். அதேநேரம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என நான்கு மொழிகளிலும் நடித்து புகழ்பெற்றுள்ளார். கடந்த 40 ஆண்டுகளில் திரையுலகில் தொடர்ந்து நடித்து வரும் மீனா, கடைசியாக மோகன் லால் நடிப்பில் வெளியான ‘திரிஷ்யம்’ படத்தில் நடித்திருந்தார்.

meena birthday

இதையடுத்து நீண்ட இடைவெளிக்கு பிறகு தற்போது ரஜினியுடன் இணைந்து ‘அண்ணாத்த’ படத்தில் நடித்துள்ளார். இந்நிலையில் நடிகை மீனா, தனது பிறந்தநாளை  இன்று கொண்டாடுகிறார். இதையொட்டி முன்னணி நடிகைகளுடன் தனது பிறந்தநாளை கேக் வெட்டி உற்சாகமாக கொண்டாடினார். இதற்காக அளிக்கப்பட்ட விருந்தில் நடிகைகள் சினேகா, கன்னிகா, ஸ்ரீதேவி விஜயகுமார் உள்ளிட்டோர் கலந்துக்கொண்டனர். மீனாவின் பிறந்தநாள் கொண்டாட்டத்தின் புகைப்படங்கள் தற்போது வெளியாகியுள்ளது.

meena birthday

Related Posts

Leave a Comment