நடிகர் விக்ராந்தை பழி வாங்க தான். பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் இருந்து ஷீலா நீக்கப்பட்டாரா !

by News Editor
0 comment

விஜய் டிவி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் டாப் தொடரான பாண்டியன் ஸ்டோர்ஸ், பல திருப்பங்களுடன் விறுவிறுப்பாக சென்று கொண்டு இருக்கிறது.

அந்த வகையில் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் மூர்த்தியின் அம்மாவாக நடித்து வந்த லட்சுமியின் கதாபாத்திரம் இறந்ததைப் போல காட்டப்பட்டு, அதில் நடித்து வந்த ஷீலா தூக்கப்பட்டுள்ளார்.

மேலும் டி.ஆர்.பி-க்காக தான் இப்படி செய்திருக்கிறார்கள் என ஒருபுறம் சொன்னாலும், இதற்கு இன்னொரு காரணமும் உண்டாம்.

அதன்படி பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் லட்சுமி அம்மாவாக நடித்து வந்தவர் நடிகை ஷீலா, இவர் பிரபல நடிகர் விக்ராந்தின் அம்மா.

பிக் பாஸில் போட்டியாளராக கலந்துக் கொள்ள விஜய் டிவி தரப்பில் விக்ராந்திடம் பேச்சு வார்த்தை நடத்தப்பட்டதாம். அதற்கு அவரும் ஓகே சொல்லியிருந்த நிலையில், ஜீ தமிழில் ஒளிபரப்பாகும் ‘சர்வைவர்’ நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்று வருகிறார்.

விஜய் டிவிக்கு போட்டி சேனலாக விளங்கும் ஜீ தமிழுக்கு விக்ராந்த் சென்றதால் தான் ஷீலாவை பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் இருந்து தூக்கக் காரணம் என கூறப்படுகிறது.

Related Posts

Leave a Comment