படப்பிடிப்பில் கதறி துடித்த பிரபல நடிகை: பெரிய மனுஷன் செய்ற காரியமா இது? பிரபல நடிகரை திட்டித் தீர்க்கும் ரசிகர்கள்

by News Editor
0 comment

சன் டிவியின் கண்ணான கண்ணே சீரியளுக்கு அதிகம் ரசிகர்கள் இருக்கிறார்கள் என சொல்லி தெரியவேண்டியது இல்லை. டிஆர்பியில் டாப் 5ல் எப்போதும் இருந்து வருகிறது அது.

முதல் மனைவிக்கு பிறந்த மகள் மீராவை ராசி இல்லாதவர் என சொல்லி ஒதுக்கி வைத்திருக்கிறார் அப்பா கௌதம். அப்பா பாசத்திற்காக ஏங்கும் மகள், அவர்களை சேர்ந்து வைக்க முயற்சிக்கும் குடும்பம், அதனால் வரும் பிரச்சனைகள் என விறுவிறுப்புக்கு பஞ்சம் இல்லாமல் சென்றுகொண்டிருக்கிறது கண்ணான கண்ணே தொடர். இதில் மீராவாக நடித்து வரும் நிமிஷிகாவுக்கு எக்கச்சக்க ரசிகர்கள் இருக்கிறார்கள். மேலும் அவரது கணவர் யுவா ரோலில் நடிக்கும் ராகுல் ரவியும் இளசுகளை கவர்ந்தவர் தான்.

இதெல்லாம் ஒருபுறம் இருக்கட்டும், தற்போது விஷயம் என்னவென்றால் மீராவாக நடித்து வரும் நிமிஷிகா ஷூட்டிங் ஸ்பாட்டில் கதறி இருக்கிறார். அதற்கு காரணம் அப்பா கௌதம் ரோலில் நடித்து வரும் நடிகர் பப்லு தான். அவர் பாம்பு போல ஊர்ந்து சென்று மீராவை பின்னால் இருந்து பயமுறுத்தி இருக்கிறார். அதனால் தான் நிமிஷிகா கத்தி இருக்கிறார்.

அந்த வீடியோவை பப்லு தான் இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு இருக்கிறார்.

Related Posts

Leave a Comment