புரட்டாசி சனிக்கிழமை சிறப்பு வழிபாடு… மூலவாய்க்கால் கரிவரதராஜ பெருமாள் கோவிலில் ஏராளமானோர் சுவாமி தரிசனம்!

by Lifestyle Editor
0 comment

ஈரோடு

கோபிச்செட்டிப்பாளையம் அருகே உள்ள மூலவாய்க்கால் கரிவரதராஜ பெருமாள் கோவிலில் நடைபெற்ற புரட்டாசி சனிக்கிழமை சிறப்பு வழிபாட்டில் நூற்றுக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

ஆண்டு தோறும் புரட்டாசி மாதத்தில் வருகின்ற சனிக்கிழமை நாட்களில் பெருமாள் கோவில்களில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சிறப்பு வழிபாடு நடத்துவது வழக்கம். இந்த நிலையில், இந்த வருடம் புரட்டாசி மாதத்தின் முதல் சனிக்கிழமையான நேற்று ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே மூலவாய்க்கால் பகுதியில் கரிவரதராஜர் திருக்கோயில் எழுந்தருளியுள்ள பெருமாளுக்கு சிறப்பு அபிஷேக பூஜை நடைபெற்றது.

தொடர்ந்து, பெருமாள் திருமேனிக்கு பால், பஞ்சாமிர்தம் உட்பட பல்வகை பொருட்களாலும், வாசனை திரவியங்களாலும் அபிஷேகம் செய்யப்பட்டு வண்ண மலர்களால் அலங்காரம் செய்யப்பட்ட பின் சிறப்பு பூஜை நடைபெற்றது. பின்னர் நடைபெற்ற உற்சவர் ஊர்வலத்தில் பூதேவி- ஸ்ரீதேவி, கரிவரதராஜ பெருமாள் தம்பதி சகிதமாக திருத்தேரில் அமர்ந்து திருக்கோயில் வளாகத்தில் பவனி வந்தார். இந்த நிகழ்ச்சியில் சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு, பெருமாளை தரிசனம் செய்தனர்.

Related Posts

Leave a Comment