தோட்டத்தின் அழகை அதிகரிக்க வேண்டுமா? அப்ப இந்த செடிகளை வையுங்க…

by Lifestyle Editor
0 comment

ஒவ்வொருவரும் தங்கள் தோட்டம் அழகாக இருக்க வேண்டுமென்று மெனக்கெடுவார்கள். அதில் சிலர் பல்வேறு வித்தியாசமான செடிகளால் தோட்டத்தை அலங்கரிப்பார்கள். ஒருசிலரோ பூக்களைக் கொடுக்கும் செடிகளை வளர்ப்பார்கள். ஏனெனில் தோட்டமானது நன்கு பளிச்சென்று இருக்கும் பூக்களால் நிறைந்து இருக்கும் போது, மனம் அமைதியுடன் சந்தோஷமாக இருக்கும் என்பதால் தான்.

அதிலும் சிலர் சிவப்பு நிற பூக்களால் தோட்டத்தை அலங்கரிக்க விரும்புவார்கள். அப்படி சிவப்பு நிறம் என்று வரும் போது, ரோஜாவைத் தான் வளர்ப்பார்கள். ஆனால் அதை விட இன்னும் பல அழகான சிவப்பு நிற பூக்கள் உள்ளன. ஆகவே இங்கு தோட்டத்தை அலங்கரிக்கப் பயன்படும் சில சிவப்பு நிற பூச்செடிகளை பட்டியலிட்டுள்ளோம். அந்த பூக்கள் என்னவென்று படித்து தெரிந்து கொண்டு, அவற்றை தோட்டத்தில் வைத்து வளர்த்து சந்தோஷமாக இருங்கள்.

சிவப்பு நிற துலிப்

தோட்டத்தில் சிவப்பு நிற துலிப் மலர்களை வளர்க்கலாம். இல்லையெனில் மஞ்சள் மற்றும் சிவப்பு கலந்த துலிப் மலர்களை வளர்க்கலாம். இவை தோட்டத்தின் அழகை அதிகரிப்பதில் முதன்மையாது.

குளோரியா லில்லி

இந்த மலர்கள் பார்ப்பதற்கு வித்தியாசமான தோற்றத்தில் இருப்பதுடன், இதனை தோட்டத்தில் வளர்த்தால், தோட்டமே வித்தியாசமான அழகில் காணப்படும். அதிலும் இந்த மலர்கள் கோடையில் நன்கு வளரக்கூடியது. ஆனால் இதற்கு அதிகப்படியான தண்ணீர் வேண்டும்.

தலியா மலர்

இந்த மலர் இனிப்பான நறுமணத்தை வீசும். மேலும் இந்த தலியா மலர் பார்ப்பதற்கு கூடு போன்று காணப்படும். தலியா மலர் பல்வேறு நிறங்களில் கிடைக்கும். ஆனால் சிவப்பு நிறத்தில் உள்ள தலியா மலர் மிகவும் அழகாக இருக்கும்.

ரோஜாவில் ஒரு வகை (Rose Knock out)

இது ரோஜாவில் ஒரு வகையான ரோஜா. இந்த ரோஜா முற்றிலும் மலர்ந்து இருக்கும். இந்த மலரும் கோடையில் வளரக்கூடியது. அந்த வகையான ரோஜாவிற்கு அதிகப்படியான தண்ணீரும், சூரியவெளிச்சமும் வேண்டும்.

ரோஜா

பெரும்பாலான வீடுகளில் காணப்படும் ஒருவகையான ரோஜா தான் இது. இந்த ரோஜாவிற்கு ஏகப்பட்ட ரசிகர்கள் உள்ளனர்.

சிவப்பு மலர்கள்

இந்த சிவப்பு நிற பூக்களின் காம்புகள் நீளமாகவும், அதன் இதழ்கள் அழகாக விரிந்தும் இருப்பதால், இதனை தோட்டத்தில் வைத்தால், இந்த மலர்களால் தோட்டம் அழகாக இருக்கும்.

கார்னேஷன் (Carnation)

இந்த மலர் மிகவும் விலை மதிப்புடையது. இதன் இதழ்கள் வித்தியமானதாகவும், அழகில் தனித்தும் காணப்படும். இதில் நிறைய நிறங்கள் உள்ளன. ஆனால் இதன் சிவப்பு நிற பூக்கள் மிகவும் க்யூட்டாக இருக்கும்.

சிவப்பு பாப்பீக்கள்

இந்த அழகான சிவப்பு நிற பாப்பீக்களைப் பார்த்தால், மனமானது சாந்தமடையும். ஆகவே இந்த சிவப்பு நிற பாப்பீக்களை தோட்டத்தில் வைத்து, மனம் கஷ்டத்தில் இருக்கும் போது அந்த மனதை அமைதிப்படுத்துங்கள்.

Related Posts

Leave a Comment