லண்டன் வீதியில் பிரபல அழகிக்கு நேர்ந்த துயரமான சம்பவம்!

by News Editor
0 comment

பொதுவெளியில் பெண்களிற்கு பாதுகாப்பற்ற நிலைமை நிலவுவதாக பிரிட்டனின் ரியாலிட்டி ஷோ நட்சத்திரம் மவுரா ஹிக்கின்ஸ் (Maura Higgins) தனக்கு நேர்ந்த அனுபவத்தை பகிர்ந்துள்ளார் . கடந்த வெள்ளிக்கிழமை லண்டன் வீதியில் இந்த சம்பவம் நடந்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

மவுரா ஹிக்கின்ஸ் (Maura Higgins), தேசிய தொலைக்காட்சி விருது விழாவின் பின்னர் மண்டபத்திலிருந்து வெளியேறி வரும் போது, அறிமுகமற்ற ஆடவர் ஒருவர், மவுராவின் கையைப்பிடித்து இழுத்து தனது காரில் ஏற்ற முயற்சித்தார்.

எனினும், அவர் தனது கையை பிடித்து இழுத்து போது தான் சிரித்துக் கொண்டிருந்ததாக மவுரா (Maura Higgins) குறிப்பிட்டுள்ளார். அதோடு அந்த இடத்தில் கூச்சலிட்டு, அந்த நபரை வன்முறையாளனாக சித்தரிக்க முயலவில்லையென்று தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் பெண்கள் வீதிகளில் சந்திக்கும் வன்முறைகளை குறிப்பிட்டு, பலரும் இந்த புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்கள்.

Related Posts

Leave a Comment