பிக்பாஸ் சீசன் 5-ல் கலந்துகொள்ள இருக்கும் முக்கிய போட்டியாளர்கள் இவர்கள் தான்!?

by News Editor
0 comment

உலகளவில் பிரபலமான பிக்பாஸ் நிகழ்ச்சி தமிழ்நாட்டிலும் மக்களின் அமோக ஆதரவைப் பெற்று வருகிறது. தமிழில் கடந்த 2017-ம் ஆண்டு பிக்பாஸின் முதல் சீசன் துவங்கியது. விஜய் டிவி-யில் ஒளிபரப்பாகி வரும் இந்நிகழ்ச்சியை முதல் சீசனில் இருந்து தற்போது வரை நடிகர் கமல்ஹாசன் தான் தொகுத்து வழங்கி வருகிறார். வரவிருக்கும் அடுத்த சீசனையும் அவரே தொகுத்து வழங்கவுள்ளார். 5-வது சீசனின் ப்ரோமோக்கள் வெளியாகி ரசிகர்களின் எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ளது.

இந்த சீசனுக்காக புதிய செட் சென்னை ஈவிபி ஸ்டூடியோவில் தயாராகி வரும் நிலையில் விரைவில் நிகழ்ச்சி துவங்கும் தேதி அறிவிக்கப்பட உள்ளது.

இந்த நிகழ்ச்சிக்காக போட்டியாளர்கள் இறுதி செய்யப்பட்டு வருகிறார். ஒவ்வொரு நாளும் போட்டியாளர்கள் குறித்த அனுமானங்கள் அதிகளவில் பரவி வருகின்றன.

இந்நிலையில் இந்த சீசனில் கலந்துகொள்ள இருக்கும் சில போட்டியாளர்களின் பட்டியல் குறித்து நம்பத்தகுந்த தகவல் கிடைத்துள்ளது.

விஜய் டீவியின் பிரபல தொகுப்பாளர் பிரியங்கா, சீரியல் நடிகை பவானி ரெட்டி, மிஸ்டர் இந்தியா பட்டம் வென்ற கோபிநாத், சன்டிவி செய்தி வாசிப்பாளர் கண்மணி, மற்றும் நமிதா(மூன்றாம் பாலினத்தவர்) ஆகியோர் கலந்துகொள்ள இருப்பதாகக் கூறப்படுகிறது.

Related Posts

Leave a Comment