ரஜினிக்காக மறைந்த எஸ்.பி.பி பாடிய கடைசி பாடல் எப்போது ரிலீஸ் தெரியுமா?- அண்ணாத்த பட முதல் பாடல்

by News Editor
0 comment

சிவா இயக்கத்தில் ரஜினி நடிப்பில் தயாராகி வரும் மாஸ் படம் அண்ணாத்த. படத்தின் படப்பிடிப்பு கொரோனா கட்டுப்பாடுகளுடன் நடந்து வருகிறது.

குஷ்பு, மீனா என இதில் ஏராளமான பிரபலங்கள் ரஜினியுடன் இணைந்து நடித்து வருகிறார்கள், மக்களும் படத்தை காண படு ஆவலாக தான் உள்ளார்கள்.

கடந்த விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷலாக படத்தின் ஃபஸ்ட் லுக் மற்றும் மோஷன் போஸ்டர் வெளியாகி இருந்தது.

இப்போது படம் குறித்த அடுத்த அப்டேட் என்னவென்றால் படத்தின் ஃபஸ்ட் சிங்கிள் வரும் செப்டம்பர் 25ம் தேதி வெளியாக இருப்பதாக கூறப்படுகிறது.

மறைந்த பாடகர் எஸ்.பிபி, ரஜினிக்காக பாடிய கடைசி பாடல் இது, அவரது முதல் வருட நினைவு தினம் அன்று பாடலை வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளார்களாம்.

Related Posts

Leave a Comment