பிரித்தானியாவில் முடிவுக்கு வரும் முடியாட்சி: வாய்ப்பை இழக்கும் குட்டி இளவரசர்

by News Editor
0 comment

பிரித்தானியாவில் அடுத்த இரு தலைமுறையுடன் முடியாட்சி முடிவுக்கு வரும் எனவும், குட்டி இளவரசர் ஜோர்ஜ் ஒருபோதும் மன்னராக வாய்ப்பில்லை எனவும் கணிப்பு ஒன்று வெளியாகியுள்ளது.

பிரித்தானிய முடியாட்சி தொடர்பான கருத்தை பிரபல நாவலாசிரியர் ஹிலாரி மாண்டெல் கணித்துள்ளார். பிரித்தானிய முடியாட்சி என்பது தற்போதைய சூழலில், இளவரசர் சார்லஸ் மற்றும் இளவரசர் வில்லியம் ஆகியோர்களுடன் முடிவுக்கு வரும் என்றே அவர் தெரிவித்துள்ளார்.

இதனால், தற்போது 8 வயதாகும் இளவரசர் ஜோர்ஜ், அரியணையேறும் வரிசையில் மூன்றாவதாக இருந்தாலும், மன்னராகும் வாய்ப்பு அவருக்கு அமையாது என்றே அவர் குறிப்பிட்டுள்ளார்.மேலும், நவீனமயமாக்கல் காரணமாக பிரித்தானிய முடியாட்சி இன்னும் இரண்டு தலைமுறைகள் மட்டுமே நீடிக்கும் எனவும், தற்போது 39 வயதாகும் இளவரசர் வில்லியம் இங்கிலாந்தின் கடைசி அரசராக இருப்பார் எனவும் அவர் கணித்துள்ளார்.

முன்னதாக இளவரசர் வில்லியத்தின் காதல் மனைவி கேட் மிடில்டனை, தனித்துவம் ஏதுமற்ற வெறும் ஒரு நெகிழி பொம்மையாகவே பார்க்கிறேன் என கூறியிருந்தார் நாவலாசிரியர் ஹிலாரி மாண்டெல்.

ஆனால், ராணியார் மற்றும் இளவரசர் சார்லஸ் தொடர்பில் உன்னதமான நபர்கள் என குறிப்பிட்டிருந்தார் ஹிலாரி மாண்டெல்.

Related Posts

Leave a Comment