வேலை தேடுபவர்களா? அப்ப இது உங்களுக்கான ஸ்பெஷல் செய்தி!!

by News Editor
0 comment

செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதங்களில் ஏராளமான வேலை வாய்ப்புகள் காத்திருக்கின்றன. விருப்பம் உடையவர்கள், வேலை தேடுபவர்கள் கீழ்காணும் விவரங்களை படித்து கல்வித் தகுதி மற்றும் ஆர்வம் இருந்தால் விண்ணப்பித்து பயனடையலாம்.

பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு (DRDO), பெங்களூருவில் செயல்பட்டுவரும் செயற்கை நுண்ணறிவு மற்றும் ரோபாட்டிக்ஸ் மையத்தில், இளநிலை ஆராய்ச்சியாளர் பணியிடத்துக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக அறிவித்துள்ளது. இதற்கு அக்டோபர் 18 மற்றும் 19 ஆம் தேதிகளில் நேர்முகத்தேர்வு நடத்தப்படும். விருப்பமுள்ளவர்கள் jrfcair2021@gmail.com என்ற மெயில் ஐடிக்கு வரும் அக்டோபர் 8 ஆம் தேதிக்குள் தங்கள் விண்ணப்பங்களை அனுப்பலாம்.

RSMSSB:

ராஜஸ்தான் துணை மற்றும் அமைச்சக சேவை வாரியம் எழுத்து தேர்வு மூலம் 250 கணினி ஆப்ரேட்டர்களை பணியில் அமர்த்த திட்டமிட்டுள்ளது. இதற்கு விண்ணப்பிக்க விரும்புவர்கள் அக்டோபர் 8 ஆம் தேதி முதல் rsmssb.rajstan.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.

CGPSC

சத்தீஸ்கர் பொது சேவை ஆணையம், மாநில உயர்கல்வித்துறையில் பேராசிரியர் பணியிடங்களுக்கான காலி இடங்களை நிரப்ப திட்டமிட்டுள்ளது. இதற்கு psc.cg.gov.in என்ற இணையபக்கத்தில் செப்டம்பர் 13 ஆம் தேதி முதல் அக்டோபர் 12 ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். இதற்கான தகுதி ஆராய்ச்சி துறையில் 10 ஆண்டுகள் அனுபவத்துடன், ஆராய்ச்சி துறையில் பி.எச்.டி பட்டம் பெற்றிருக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுளது.

NHPC

நேஷனல் ஹைட்ரோ எலக்ட்ரிக் பவர் கார்ப்பரேஷன் லிமிடேட், மருத்துவ பணியாளர், உதவியாளர், ஜூனியர் இன்ஜினியர்(சிவில், எலக்ட்ரிக்கல் மற்றும் மெக்கானிக்கல்) மற்றும் கணக்காளர் ஆகிய இடங்களுக்கு ஆன்லைன் தேர்வு மூலம் ஆட்களை தேர்வு செய்யவுள்ளது. இதற்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ளவர்கள் செப்டம்பர் 30 ஆம் தேதி வரை nhpcindia.com என்ற பக்கத்தில் விண்ணப்பிக்கலாம்.

அமேசான்

Mega Walkin Drive | Amazon | 16th May 2019 | 0-2 yrs | Chennai – CareerForFreshers
உலகின் மிகப்பெரிய ஈகாமர்ஸ் நிறுவனமான அமேசான் நிறுவனம் இந்தியாவில் மேனேஜ்மென்ட் மற்றும் டெக்னாலஜிஸ் துறையில் முதலீடு செய்துள்ளது. இதனால் அந்த துறைகளில் 55,000 வேலைவாய்ப்புகளை உருவாக்க திட்டமிட்டுள்ளது. இதற்காக அமேசான் நிறுவனம் வரும் 16 ஆம் தேதி இந்தியாவில் தனது முதல் மெய்நிகர் job fair -ஐ நடத்தவுள்ளது. இதில் கலந்துகொள்ள எவ்வித நுழைவு கட்டணமோ, முன்பதிவோ செய்ய தேவையில்லை

SPSC

சிக்கிம் பப்ளிக் சர்வீஸ் கமிஷன் (SPSC)அதன் அதிகாரப்பூர்வ இணையதளமான www.spscskm.gov.in இல் மீன்வளத் தொகுதி அதிகாரிகள் மற்றும் மீன்வளக் காவலர்களை ஆட்சேர்ப்பு செய்ய அறிவித்துள்ளது. மீன்வளத் தொகுதி அதிகாரிகளுக்கு 11 காலியிடங்களும், மீன்வளக் காவலர் பதவிக்கு 13 காலியிடங்களும் உள்ளன. சம்பந்தப்பட்ட கல்வித் தகுதி கொண்ட விண்ணப்பதாரர்கள் செப்டம்பர் 15 அல்லது அதற்கு முன் ஆன்லைன் விண்ணப்பத்தை சமர்ப்பிக்கலாம்

Related Posts

Leave a Comment