சின்னப்படம், பெரியப்படம் என்றெல்லாம் நினைக்க மாட்டேன்; மக்களை சிரிக்க வைக்கணும்- வடிவேலு

by News Editor
0 comment

நடிகர் வடிவேலு, இன்று தனது 61வது பிறந்த தினத்தை கொண்டாடிவருகிறார். கடந்தாண்டு 10 ஆண்டுகளுக்கு மேலாக சினிமாவில் தோன்றாத வடிவேலுவின் அனைத்து பிரச்னைகளும் சமீபத்தில் தீர்த்து வைக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து, சுராஜ் இயக்கும் ‘நாய்சேகர்’ படத்தின் மூலம் ரீ எண்ட்ரி கொடுக்க உள்ளார் வடிவேலு. இந்த ஆண்டு அவருடைய பிறந்த தினத்தை நாய் சேகர் படக்குழுவினருடன் கேக் வெட்டி கொண்டாடினார். அந்த புகைப்படம் இணையதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது

பிறந்தநாள் கொண்டாட்டத்துக்கு பின் செய்தியாளர்களிடம் பேசிய வடிவேலு, “இந்த பிறந்தநாள் புதிதாக பிறந்ததுபோல் உள்ளது. இன்னும் சாதிக்க வேண்டியது நிறைய உள்ளது. சாதித்து விட்டதாக நினைக்கவில்லை. வாழ்க்கை என்றால் ஆயிரம் இருக்கும். மக்கள் எல்லோரும் மகிழ்ச்சியாக வாழ வேண்டும் என்பதே என் ஆசை. பெரிய படம், சின்ன படம் என நினைக்க மாட்டேன். மக்களை சிரிக்க வைப்பதே எனது கடமை” என தெரிவித்தார்.

Related Posts

Leave a Comment