இயேசுவை சந்தித்த விநாயகர்! ஓர் சுவாரசிய வீடியோ

by News Editor
0 comment

ஒவ்வொரு ஆண்டும் ஆவணி மாதம் வளர்பிறை நான்காம் நாள் சுக்ல பட்ச சதுர்த்தி திதியில் விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்படுகிறது.

முழுமுதற் கடவுளான விநாயகரை எண்ணிச் செய்யப்படும் எந்த செயலும் உலக நன்மையையும், ஆன்மீக பலத்தையும் மகிழ்ச்சியையும் அளிக்கவல்லது.

நாளை விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்படவுள்ளது, கொரோனா காலம் என்பதால் பல்வேறு கட்டுப்பாடுகளுடன் பண்டிகையை கொண்டாட அரசு அறிவுறுத்தியுள்ளது.

இந்நிலையில் ஸ்பெயினில் இயேசுவை விநாயகர் சந்தித்த அற்புத தருணம் நிகழ்ந்துள்ளது, டுவிட்டரில் வெளியான இந்த வீடியோவுக்கு லைக்ஸ்கள் குவிந்து வருகின்றன.

ஸ்பெயினில் வசிக்கும் இந்தியர்கள் விநாயகர் சதுர்த்தியை கொண்டாட எண்ணி, தேவாலயம் இருக்கும் பகுதியில் ஊர்வலம் செல்ல அனுமதி கேட்டுள்ளனர்.

அவர்களோ அனுமதி அளித்ததுடன், தேவாலயத்துக்கு உள்ளே கொண்டு வர கூறியுள்ளனர், உள்ளே விநாயகரும், இயேசுவும் சந்தித்துக் கொண்டார்களாம்.

இதுதொடர்பான வீடியோ காட்சிகள் வெளியாகி வைரலாகி வருகிறது.

Related Posts

Leave a Comment