விநாயகர் காயத்ரி மந்திரம்!

by News Editor
0 comment

மந்திரங்கள் என்பது மகத்தான சக்திகளைக் கொண்டது. கடவுள் மீது கவனம் செலுத்த உதவுகிறது. தெய்வீக அதிர்வை ஏற்படுத்தி பிரபஞ்சத்தில் எதிரொலிக்கிறது. தொடர்ந்து மந்திரங்கள் சொல்வது மனதுக்கு அமைதியையும் தெளிவையும் தருகின்றன.

விநாயகர் காயத்ரி மந்திரத்தைச் சொல்வது பல விதமான தோஷங்களை நீக்கும். தினமும் விநாயகர் காயத்ரி மந்திரத்தைச் சொல்லி வந்தால் காரியத் தடைகள் விலகும்.

விநாயகர் காயத்ரி மந்திரம்!
மந்திரம்:

ஓம் ஏக தந்த்தாய வித்மஹே

வக்ர துண்டாய தீமஹி

தந் னோ தந்திஹி ப்ரசோதயாத்:

அர்த்தம்:

ஓம். ஒற்றை தந்தத்தைக் கொண்டவரை உம்மை வணங்குகிறேன். யானை முகத்தோனே எனக்கு சிறப்பான அறிவை தந்து என்னை ஆசிர்வதியுங்கள்.

விநாயகரை வணங்கி முடிக்கும் போது தீபாராதனை காட்டும் போது இந்த மந்திரத்தை சொல்ல வேண்டும். இந்த மந்திரத்தைத் தினமும் 108 முறை சொல்லியும் வழிபடலாம். இப்படி செய்து வந்தால் தோஷங்கள் நீங்கி, வெற்றி பெறலாம்.

Related Posts

Leave a Comment