வாவ்.. செம கியூட்ல! முதன்முதலாக தனது மகனின் புகைப்படத்தை வெளியிட்ட சந்திரலேகா சீரியல் நடிகர்! கொஞ்சி தீர்க்கும் ரசிகர்கள்!!

by News Editor
0 comment

சன் டிவி தொடர்கள் என்றாலே அந்த காலம் தொடங்கி இந்தக் காலம் வரை ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பு இருக்கும். அவ்வாறு தற்போதும் சுவாரஸ்யமாகவும் விறுவிறுப்பாகவும் ஏராளமான தொடர்கள் ஒளிபரப்பாகி வருகிறது. அந்த தொடர்களை ஒரு எபிசோட் கூட தவறவிடாமல் பார்க்கும் பெரும் ரசிகர்கள் பட்டாளமே உள்ளது.

அவ்வாறு பிற்பகலில் ஒளிபரப்பாகி மக்கள் மத்தியில் பிரபலமாக இருக்கும் தொடர் சந்திரலேகா. இதில் ஹீரோவாக, முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் நடிகர் ஜெய் தனுஷ். இந்த தொடரின் மூலம் இவர் பெருமளவில் பிரபலமடைந்துள்ளார். இவரது மனைவி கீர்த்தி. இவரும் பிரபல சீரியல் நடிகை ஆவார். கீர்த்தி ஏராளமான தொடர்களில் வில்லி உட்பட பல முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்.

இந்தநிலையில் அண்மையில் கீர்த்தி தான் கர்ப்பமாக இருக்கும் மகிழ்ச்சியான செய்தியை தெரிவித்திருந்தார். மேலும் பல கர்ப்பகால புகைப்படங்களையும் சமூக வலைதளத்தில் வெளியிட்டு வந்தார். இந்நிலையில் சமீபத்தில் அந்த அழகிய ஜோடிக்கு ஆண் குழந்தை பிறந்தது. அதனைத் தொடர்ந்து தற்போது குழந்தைக்கு பெயர் சூட்டும் விழா நடைபெற்றுள்ளது. குழந்தைக்கு ருத்வேத் என பெயரிட்டுள்ளனர் அத்தகைய புகைப்படங்களை கீர்த்தி தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்ட நிலையில் அது வைரலாகி வருகிறது.

Related Posts

Leave a Comment