இலங்கைத் தமிழரான மைத்ரேயி குறித்து வெளியாகியுள்ள ஒரு புதிய தகவல்!

by News Editor
0 comment

இலங்கைத் தமிழ் வம்சாவளியினரான மைத்ரேயி ராமகிருஷ்ணனைக் குறித்து புதிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.

ஒன்ராறியோவின் Mississaugaவில் வாழும் மைத்ரேயி (19), ஒரு கனேடிய நடிகை என்பதை பலரும் அறிந்திருப்பார்கள்.

தெரியாதவர்களுக்கு, மைத்ரேயி ராமகிருஷ்ணனின் குடும்பம் இலங்கையிலிருந்து கனடாவுக்கு குடிபெயர்ந்தது.

மைத்ரேயி நடித்துள்ள Never Have I Ever என்ற நெட்ப்ளிக்ஸ் தொடர் தற்போது பெரிய வரவேற்பைப் பெற்றுள்ளது. அதில் தேவி என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் அவர்.

தற்போது மைத்ரேயியைக் குறித்த புதிய தகவல் ஒன்று வெளியாகி அவரது ரசிகர்களை உற்சாகமடையச் செய்துள்ளது.

ஆம், ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட Never Have I Ever தொடரின் மூன்றாவது சீஸன் விரைவில் வெளியாக உள்ளதாம்.

2022ஆம் ஆண்டின் கோடை அல்லது இலையுதிர்காலத்தில் அது வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

Related Posts

Leave a Comment