திருச்செந்தூர்: 10 நாள்களுக்குப் பிறகு அனுமதி; நீண்ட வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்த பக்தர்கள்!

by News Editor
0 comment

திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோயிலில் 10 நாள்களுக்குப் பிறகு மீண்டும் பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளதால் பலரும் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் பெற்றுச் சென்றனர்

முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம்படை வீடும், கடற்கரை ஓரத் தலமும் ஆனது திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில். எப்போதும் கடலென பெருங்கூட்டம் முருகனின் தரிசனத்துக்காகத் திரளும் புண்ணிய பூமி திருச்செந்தூர். திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோயிலில் ஆண்டுதோறும் நடத்தப்படும் திருவிழாக்களில் ’ஆவணித் திருவிழா’ மற்றும் ’மாசித்திருவிழா’ என இரண்டு பிரமோற்சவத் திருவிழாக்கள் மிக முக்கிய திருவிழாக்களாகும்.

இந்தாண்டு ஆவணித்திருவிழா, கடந்த 27-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. நாளை செப்டம்பர் 7-ம் தேதி வரை இந்தத் திருவிழா நடைபெறுகிறது. கொரோனா பரவல் தடுப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கடந்த 27-ம் தேதி முதல் 10-ம் நாள் திருவிழாவான நேற்று 5-ம் தேதி வரை பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்படவில்லை.

திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான 7வது நாள் விழாவில் சுவாமி சண்முகர், வெட்டிவேர் சப்பரம் மற்றும் சிவப்புசாத்தி அலங்காரத்தில் எழுந்தருளல், 8வது நாள் விழாவில் பச்சைசாத்தி அலங்காரத்தில் எழுந்தருளல் தரிசனம் செய்ய பக்தர்களின் கூட்டம் அலைமோதும். இந்தாண்டு பக்தர்களுக்கு அனுமதிக்கப்படவில்லை என்பதால், திருக்கோயில் வளாகம், கடற்கரை வெறிச்சோடிக் காணப்பட்டது.

இருப்பினும், வெளியூர்களில் இருந்தது தரிசனத்திற்காக குடும்பத்துடன் வந்த பக்தர்கள், கோயிலுக்குச் செல்லும் நுழைவு வாயிலில் நின்றபடியும், தூரத்தில் நின்றபடியும் கோபுரத்தை நோக்கி வணங்கிவிட்டு ஏமாற்றுத்துடன் திரும்பிச் சென்றனர்.

Related Posts

Leave a Comment