தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டம் எதிர்வரும் 13 ஆம் திகதி வரை நீடிப்பு

by Lankan Editor
0 comment

நாட்டில் தற்போது அமுலில் உள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டம் நீடிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல அறிவித்துள்ளார்.

அதன்படி குறித்த ஊரடங்கு செப்டம்பர் 13 ஆம் திகதி அதிகாலை 4 மணி வரை அமுலில் இருக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்த காலகட்டத்தில் அனைவரும் சுகாதார நடைமுறைகளை பின்பற்றுமாறும் தடுப்பூசியை பெற்றுக்கொள்ளுமாறும் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல கேட்டுக்கொண்டார்.

கடந்த 20 ஆம் திகதி முதல் 30 ஆம் திகதி வரை அமுலாகும் வகையில் அமுல்படுத்தப்பட்டிருந்த தனிமைப்படுத்தல் ஊரடங்கு, பின்னர் தளர்த்தப்படாமல் எதிர்வரும் 6 ஆம் திகதிவரை நீடிக்கப்பட்டது.

இந்நிலையில்,  இன்று மீண்டும் கொரோனா தடுப்பு செயலணி கூடிய வேளையில் எதிர்வரும் 13 ஆம் திகதி அதிகாலை 4 மணிவரை தனிமைப்படுத்தல் ஊரடங்கை மேலும் நீடிக்க தீர்மானிக்கப்பட்டது.

Related Posts

Leave a Comment