18 முதல் 30 வயதுக்கு இடைப்பட்டோருக்கு தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கை ஆரம்பம்

by Lankan Editor
0 comment

இலங்கையில் 18 முதல் 30 வயதுக்கு இடைப்பட்டவர்களுக்கு தடுப்பூசியேற்றும் நடவடிக்கை நேற்று முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

குறித்த திட்டம் மாவட்ட ரீதியில் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல அறிவித்துள்ளார்.

நாட்டில் 18 முதல் 30 வயதுக்கு இடைப்பட்ட 3.7 மில்லியன் பேருக்கு தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கையை விரைபுபடுத்துமாறு உரிய அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

குறித்த வயது வரம்பில் உள்ள முன்னணி சுகாதார ஊழியர்களுக்கும் 18 முதல் 30 வயதுக்கு இடைப்பட்ட சில அத்தியாவசிய சேவையாளர்களுக்கும் ஏற்கனவே தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாகவும் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

30 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் இன்னும் மூன்று வாரங்களுக்குள் முழுமையாக தடுப்பூசி செலுத்தப்படும் என்றும், 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் ஒக்டோபர் இறுதிக்குள் தடுப்பூசி செலுத்தப்படும் என்றும் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல அறிவித்துள்ளார்.

Related Posts

Leave a Comment