“ராணுவம் நிர்ணயிக்கும் விலையில் உணவு தானியங்கள் விற்பனை” – இலங்கையில் திடீர் அறிவிப்பு!

by News Editor
0 comment

அத்தியாவசிய உணவு விநியோகத்திற்கான அவசரகால விதிமுறைகள் இலங்கையில் நள்ளிரவு முதல் பிரகடனப்படுத்தப்பட்டது.

பொதுமக்கள் பாதுகாப்பு கட்டளை சட்டத்தின் இரண்டாவது பிரிவின் மூலம் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களின் பிரகாரம், கட்டளை சட்டத்தின் இரண்டாவது பிரிவில் ஏற்பாடுகளை நடைமுறைப்படுத்தி 5 ஆவது பிரிவின் ஏற்பாடுகள் பிரகாரம் தயாரிக்கப்பட்டுள்ள விதிமுறைகளின் அடிப்படையில் நெல் ,அரிசி ,சர்க்கரை உள்ளிட்ட அத்தியாவசிய உணவுப் பொருட்களை மொத்தமாக பதுக்குதல், அதிக விலைக்கு மக்களை அசௌகரியத்துக்கு உள்ளாகும் வகையில் நடைபெறும் முறைகேடுகளை தவிர்ப்பதற்காக அரசாங்கத்தின் உத்தரவாத விலைக்கு அல்லது இறக்குமதி செய்யப்பட்ட விலையை அடிப்படையாகக் கொண்டு , நெல், அரிசி, சீனி உள்ளிட்ட அத்தியாவசிய உணவுப் பொருட்களை மொத்தமாக கொள்வனவு செய்து மக்களுக்கு நியாயமான விலைக்கு பெற்றுக்கொடுப்பதற்கு அதிகாரமளிக்கப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பதற்கும் , தேவையான நெல் அரிசி உள்ளிட்ட பொருட்களை விநியோகிக்க ஒருங்கிணைப்பு செய்வதற்காக குழு அமைக்கப்பட்டுள்ளது.

“ராணுவம் நிர்ணயிக்கும் விலையில் உணவு தானியங்கள் விற்பனை” – இலங்கையில் திடீர் அறிவிப்பு!
இதன்மூலம் இலங்கையில் இனி ராணுவம் தான் உணவு கொள்முதலை மொத்தமாக செய்ய முடியும். அனைத்து விவசாயிகள் மற்றும் வியாபாரிகளிடம் இருந்து உணவு தானியங்களைப் பெற்று ராணுவம் நிர்ணயிக்கும் விலையில் தான் மேற்கண்ட உணவு தானியங்கள் விற்பனை செய்யப்படும்.இலங்கையில் அறிவிக்கப்படாத எமர்ஜென்சி ஆக இந்த நடவடிக்கை பார்க்கப்படுகிறது

Related Posts

Leave a Comment