வீட்டில் எறும்புத் தொல்லை அதிகமாக இருக்கின்றதா? இதை மட்டும் செய்தாலே போதும்

by News Editor
0 comment

எறும்புகள் உள்ளே நுழையும் இடத்தில் எலுமிச்சை சாற்றை பிழியுங்கள் அல்லது எலுமிச்சைத் தோலை போட்டு வையுங்கள்.

மேலும் தரையை கழுவும் போதும் துடைக்கும் போதும் அந்த தண்ணீரில் சிறிதளவு எலுமிச்சை சாற்றை கலந்து கழுவலாம். எந்த ஒரு கசப்பான புளிப்பான பொருளும் எறும்புகளை விரட்டும்.

சர்க்கரை வைத்திருக்கும் பாத்திரத்தில் எப்போதும் எறும்புத் தொல்லை இருந்தால் அந்தப் பாத்திரத்தினுள் நான்கைந்து கிராம்பை போட்டால் எறும்பு வராது.

சமையலறை அலமாரிகளில் உலர்ந்த வெள்ளரிக்காய் தோலை போட்டு வைத்தால் எறும்புகள் வராது.

வீட்டில் எறும்புப் புற்று இருந்தால் அங்கே கொஞ்சம் பெருங்காயத் தூளைத் தூவிவிட்டால் எறும்புத் தொல்லை இருக்காது.

முந்திரி பருப்பை எறும்பு அழிக்காமல் இருக்க சிறிய தகர டப்பாவில் போட்டு வைத்தால் எறும்பு வராமல் இருக்கும் மற்றும் நீர்த்துப் போகாமல் இருக்கும்.

Related Posts

Leave a Comment