பிரித்தானியாவை விட்டு வெளியேற்றப்படும் 58,000 பேர்?: அச்சத்தை ஏற்படுத்தியுள்ள ஒரு தகவல்

by News Editor
0 comment

பிரெக்சிட்டுக்குப் பின், ஐரோப்பிய ஒன்றிய உறுப்பினர்கள் பிரித்தானியாவில் தொடர்ந்து வாழ, பணியாற்ற வகை செய்யும் வகையிலான திட்டம் ஒன்றிற்கு விண்ணப்பிக்கும் கால அவகாசம் முடிந்துபோனதால், சுமார் 58,000 பேர் பிரித்தானியாவை விட்டு வெளியேற்றப்படலாம் என தகவல் வந்துள்ளதைத் தொடர்ந்து, ஐரோப்பிய ஒன்றிய உறுப்பு நாடுகளைச் சேர்ந்த ஆயிரக்கணக்கானவர்கள் அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர்.

பிரித்தானியா, ஐரோப்பிய ஒன்றியத்தைவிட்டு 2020ஆம் ஆண்டு, ஜனவரி மாதம் 31ஆம் திகதி வெளியேறியது. என்றாலும், பிரெக்சிட்டால் ஏற்பட்டுள்ள மாற்றங்களை எதிர்கொள்ள தயாராவதற்காக 2020 டிசம்பர் 31 வரை ஒரு கால அவகாசம் கொடுக்கப்பட்டது, அது transition period என்று அழைக்கப்படுகிறது.

பிரெக்சிட்டுக்குப் பிறகும் ஐரோப்பிய ஒன்றிய உறுப்பு நாடுகளைச் சேர்ந்தவர்கள் பிரித்தானியாவில் தொடர்ந்து வாழ, பணியாற்ற வகை செய்யும் வகையில் EU settlement scheme என்ற திட்டம் ஒன்று உருவாக்கப்பட்டது.

அதன்படி, தொடர்ந்து பிரித்தானியாவில் வாழவிரும்பும் ஐரோப்பிய ஒன்றிய உறுப்பு நாடுகளைச் சேர்ந்தவர்கள், ஜூன் மாதம் 30ஆம் திகதிக்குள் இந்த திட்டத்தின் கீழ் பிரித்தானியாவில் வாழ்வதற்காக விண்ணப்பிக்கும்படி கேட்டுக்கொள்ளப்பட்டனர்.

ஆனால், பல்வேறு காரணங்களால், சுமார் 58,000 பேர், கால அவகாசம் முடிந்த பிறகே விண்ணப்பித்திருக்கிறார்கள்.

ஆகவே, அவர்களது விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படுமா இல்லையா என்பது தெரியாமல் அவர்கள் அச்சத்தில் ஆழ்ந்துள்ளார்கள்.

இவர்கள் நிலையே இப்படியானால், இன்னமும் விண்ணப்பிக்காமலே ஒரு கூட்டம் மக்கள் உள்ளனர். அப்படிப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Related Posts

Leave a Comment