அருணாச்சலேஸ்வரர் கோவில் ஆடிப்பூரம் விழா… பராசக்தி அம்மன் வளைகாப்பு உற்சவத்துடன் நிறைவு

by News Editor
0 comment

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயிலில் ஆடிப்பூரம் திருவிழா நிறைவையொட்டி, நேற்று மாலை பராசக்தி அம்மனுக்கு வளைகாப்பு உற்சவம் விமரிசையாக நடைபெற்றது.

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயிலில் ஆடிப்பூரம் திருவிழா கடந்த 1ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதனை தொடர்ந்து, நாள்தோறு காலை, மாலை வேளைகளில் உற்சவர்கள் விநாயகர், பராசக்தி அம்மன் கோயில் ஐந்தாம் பிரகாரத்தில் வலம் வந்தனர்.

இந்த நிலையில், ஆடிப்பூரம் நிறைவு விழாவையொட்டி நேற்று காலை 11.30 மணி அளவில் பராசக்தி அம்மன் கோவில் ஐந்தாம் பிரகாரம் சிவகங்கை தீர்த்தக் கரையில் எழுந்தருள, தீர்த்தவாரி நடைபெற்றது. தீர்த்தவாரிக்கு பின்னர் அம்மன் வளைகாப்பு மண்டபத்தில் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளினார். அங்கு அம்மனுக்கு அபிஷேகமும், தீபாரதனையும் நடைபெற்றன.

அருணாச்சலேஸ்வரர் கோவில் ஆடிப்பூரம் விழா… பராசக்தி அம்மன் வளைகாப்பு உற்சவத்துடன் நிறைவு!
தொடர்ந்து, நேற்று மாலை 4.30 மணிக்கு பராசக்தி அம்மனுக்கு, சிவாச்சாரியார்கள் வளைகாப்பு நிகழ்ச்சியை நடத்தினர். இதில் கொரோனா பரவலை தடுக்கும் விதமாக பக்தர்கள் யாரும் அனுமதிக்கப்பட வில்லை. விழாவுக்கான ஏற்பாடுகளை கோயில் இணை ஆணையர் இரா.ஞானசேகர் மற்றும் ஊழியர்கள் செய்திருந்தனர்.

Related Posts

Leave a Comment