சுத்தி சுத்தி சுழன்று அடித்த பாக்ஸர் பூஜா ராணி… அதகளமாக காலிறுதிக்கு முன்னேறினார்!

by News Editor
0 comment

ஒலிம்பிக் போட்டி தொடங்கிய முதல் நாளுக்குப் பிறகு ஒவ்வொரு நாளும் இந்திய வீரர், வீராங்கனைகள் தோல்வி என்ற செய்திகளே வட்டமடிக்கின்றன. ஆனால் அதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் நன்னாளாக இந்நாள் தொடங்கியிருக்கிறது. ஆம் மகளிர் வில்வித்தை போட்டியில் தீபிகா குமாரி ரவுண்ட் ஆப் 16 சுற்றில் அமெரிக்க வீராங்கனையை வீழ்த்தி காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறியுள்ளார். உலகின் நம்பர் 1 வீராங்கனை எப்படி விளையாடுவார் என்பது போல விளையாடி வெற்றிக்கனியைப் பறித்தார்.

அதேபோல குத்துச்சண்டையில் அறிமுக ஒலிம்பிக்கிலேயே காலிறுதிக்கு முன்னேறி பூஜா ராணி என்ற வீராங்கனை சாதித்துள்ளார். மகளிருக்கான 69-75 கிலோ மிடில்வெயிட் எடைப்பிரிவில் காலிறுதிக்கு முந்தைய சுற்று ஆட்டத்தில் இந்திய வீராங்கனை பூஜா ராணி, அல்ஜிரியா வீராங்கனை இச்ராக் சாய்ப்புடன் மோதினார். ஆரம்பம் முதலே ஆக்ரோஷமாக விளையாடிய பூஜா ராணியின் ஒவ்வொரு பஞ்ச்சும் தெறித்தது.

சுத்தி சுத்தி அடித்து அல்ஜிரிய வீராங்கனையைக் கலங்கடித்தார். 30-26, 30-27, 30-27, 30-27, 30-27 என வரிசையாக ஒவ்வொரு சுற்றிலும் இச்ராக்கை வீழ்த்தினார். இறுதியில் 5-0 என்ற சுற்று கணக்கில் இச்ராக்கை வென்று வாகை சூடினார் பூஜா ராணி. இதன்மூலம் அவர் காலிறுதிக்கு முன்னேறியுள்ளார். காலிறுதியில் அயர்லாந்து அல்லது சீனா வீராங்கனையோடு மோதுவார். இதில் வென்றால் அரையிறுதிக்கு முன்னேறி அவருக்கு வெண்கலப் பதக்கம் உறுதியாகிவிடும்.

Related Posts

Leave a Comment