பிரம்மாண்ட பொன்னியின் செல்வன் படத்திற்காக போடப்பட்ட செட்! லீக்கான புகைப்படங்கள்! படக்குழுவினர் அதிர்ச்சி

by News Editor
0 comment

புதுச்சேரியில் நடைபெற்று வரும் ‘பொன்னியின் செல்வன்’ படத்தின் படப்பிடிப்புதள புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

சமீபகாலமாக புராணக்கதைகளை, இலக்கிய நாவல்களை மையமாகக் கொண்டு படங்கள் உருவாக்கப்படுவது அதிகரித்த வண்ணம் உள்ளது. இந்நிலையில் கல்கியின் பொன்னியின் செல்வன் நாவலை படமாக எடுக்க வேண்டும் என்பது இயக்குனர் மணிரத்னத்தின் நீண்டநாள் கனவு. அதனை நனவாக்கி அவர் பொன்னியின் செல்வன் படத்தை மிகவும் பிரம்மாண்டமாக இயக்கி வருகிறார்.

இதில் விக்ரம், கார்த்தி, அமிதாப் பச்சன், ஐஸ்வர்யா ராய், திரிஷா, ஜெயம் ரவி, விக்ரம் பிரபு, பிரபு, பேபி சாரா உள்ளிட்ட பெரும் நட்சத்திர பட்டாளமே நடித்து வருகின்றனர். இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார். பொன்னியின் செல்வன் படத்தை இரு பாகங்களாக உருவாக்கி வருகின்றனர்.

இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது பாண்டிச்சேரியில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் படப்பிடிப்பிற்காக பிரமாண்டமாக செட் போட்ட புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. அதாவது கடலுக்கு அருகே கப்பல், போர் கேடயங்கள், குடில்கள் போன்ற செட்டிங் அமைக்கப்பட்டுள்ளது. அந்த புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.

Related Posts

Leave a Comment