வானில் இருந்து விழுந்த மர்மப் பொருள்.! திருக்கழுக்குன்றம் அருகே பரபரப்பு.!

by News Editor
0 comment

செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றம் அருகே உள்ள வடக்குப்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் வெங்கடேசன். இவர் நேற்று முன்தினம் தனது ஆடுகளை மேய்ப்பதற்காக அருகில் உள்ள வயல்வெளிக்கு சென்றார். வழியில் ஒரு மர்மப்பொருள் வயல் வெளியில் செங்குத்தாக விழுந்து கிடப்பதை பார்த்துள்ளார்.

இதனைப்பார்த்து அதிர்ச்சியடைந்த வெங்கடேசன், அது வெடி பொருளாக இருக்கலாம் எனக் கருதி அப்பகுதி கிராம நிர்வாக அலுவலருக்கு தகவல் தெரிவித்துள்ளார். இதையடுத்து அங்கு வந்த கிராம நிர்வாக அலுவலர் வீரராகவன், அந்த மர்மப் பொருளை பார்வையிட்டார். அது நவீன வெடிபொருள் போன்று 3 அடி நீளத்திலும், 10 கிலோ எடையுடனும் காணப்பட்டது. மேலும் விழுந்த இடத்தில் பள்ளம் ஏற்பட்டிருந்தது. அதில் எச்சரிக்கை என ஆங்கிலத்தில் வெள்ளை நிறத்தில் பெரிய எழுத்துக்களில் எழுத்தப்பட்டிருந்தது. அதில் எலக்ட்ரானிக் பட்டன்கள் ஏராளமாக காணப்பட்டது.

மிக உயரத்தில் இருந்து விழுந்த அந்த பொருள் குறித்து திருக்கழுக்குன்றம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்து கிராம மக்களும் ஏராளமானோர் அங்கு குவிந்தனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், மர்ம பொருளை ஆய்வுக்கு உட்படுத்த காவல்நிலையம் எடுத்து சென்றனர். அது வெடிபொருள் இல்லை என்றும் அந்த பொருள் கடற்படை விமானத்தில் கொண்டு செல்லும்போது தவறி விழுந்ததா? என்ற கோணத்தில் விசாரணை நடத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Posts

Leave a Comment