இலங்கையில் COVID – 19 காரணமாக கடுமையான சுகாதார வழிகாட்டல், சட்டங்களுடனே திருமணம் நடைபெற வேண்டும்!

by Web Team
0 comment

இலங்கையில் COVID -19 சட்டத்தை மீறி திருமண நிகழ்வுகளை நடத்துகின்றவர் மற்றும் திருமண மண்ட உரிமையாளர்களுக்கு எதிராக தனிமைப்படுத்த சட்டத்தின் கீழ் வழக்கு தொடர நடவடிக்கை எடுத்து வருகின்றோம் என்று பொது சுகாதார பரிசோதகரின் சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹன தெரிவித்துள்ளார்.

சுகாதார அதிகாரிகளின் வழிகாட்டுதலுடன் திருமண நிகழ்வுகளை நடத்துவதற்கு அனுமதி வழங்கி இருக்கின்ற போதும், அண்மை காலமாக நடைபெற்ற பல திருமணங்கள் சுகாதார வழிகாட்டல் சட்டத்திற்கு அமைவாக நடைபெற வில்லை என்பதாலும் மீறுபவர்களுக்கு எதிராக தனிமைப்படுத்தும் சட்டத்தின்கீழ் வழக்கு தொடரப்படும் என தெரிவித்தார்.

இது தொடர்பாக அவர் தொடர்ந்தும் கருத்து தெரிவிக்கையில் கடுமையான சுகாதார வழிகாட்டல், சட்டங்களுடனே திருமணம் நடைபெற வேண்டும். இருந்தபோதும் கடந்த சில வாரங்களில் சுகாதார வழிகாட்டல், சட்டங்களுக்கும் எதிராக திருமணங்கள் நடைபெற்று உள்ளது.

இதன் காரணமாக இன்று முதல் நாடு முழுவதும் திருமண மண்டபங்களை கண்காணிப்பதற்கு தீர்மானித்துள்ளோம் என பொது சுகாதார பரிசோதகர்களின் சங்கத்தலைவர் சங்கத் தலைவர் உபுல் ரோஹன தெரிவித்துள்ளார்.

Related Posts

Leave a Comment