தடுப்பூசி போடும் நடவடிக்கைகளை துரிதப்படுத்துதல்- ராணுவ தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா !

by Web Team
0 comment

இலங்கையில் தடுப்பூசி போடும் நடவடிக்கைகளை துரிதப்படுத்தும் விதமாக அருகில் உள்ள COVID-19 தடுப்பூசி போடும் இடங்களுக்கு சென்று அவற்றைப் பெற்றுக் கொள்ளுமாறு COVID -19 செயற்பாட்டு மத்திய நிலையத்தின் தலைவரான ராணுவ தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா கோரிக்கை விடுத்துள்ளார்.

தடுப்பூசிகளை வழங்கும் நடவடிக்கைகளை இந்த மாதத்தில் நிறைவு செய்ய எதிர்பார்த்துள்ளதாகவும் நாட்டின் தொற்றைத் தடுக்க இதுவே ஒரே வழி என்றும் அவர் கூறியுள்ளார். அத்துடன் கொழும்பை தவிர பிற மாவட்டங்களில் தடுப்பூசி வழங்குவதை துரிதப்படுத்தி உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

சில இடங்களில் தடுப்பூசிகளை போட்டுக் கொள்வதில் கூடிய அக்கறை காணமுடியவில்லை. புத்தளம் மாவட்டத்தில் கூடிய அக்கறை காட்டியுள்ளனர். COVID -19 தடுப்பூசிகளை கொழும்பு விகாரமாதேவி தேசிய பூங்கா போன்ற இடங்களில் பெற்றுக்கொள்ள முடியும் என ராணுவ தளபதி கோரிக்கை விடுத்துள்ளார்.

Related Posts

Leave a Comment