வீட்டில் இருக்கும் வறுமைக்கு முற்றுப்புள்ளி வைக்க சமையலறையில் இருக்கும் இந்த 3 பொருட்களை தினம்தோறும் இப்படி பயன்படுத்தினாலே போதும்.

by News Editor
0 comment

குடும்பத்தில் கஷ்டம் வருவதற்கு முதல் காரணம் வறுமை. இந்த வறுமையை நம்முடைய வீட்டில் நிரந்தரமாக தங்க வைக்க கூடாது. வறுமை வீட்டிற்குள் நுழைந்து விட்டால் அதன் பின்னால் சண்டை சச்சரவுகள், மன அழுத்தம், மன அழுத்தத்தினால் நோய் நொடிகள், தரித்திரம் என்று ஒவ்வொன்றாக நம் வீட்டிற்குள் நுழைய தொடங்கிவிடும். இப்படிப்பட்ட வறுமையின் பிடியில் இருந்து நம்மை பாதுகாக்கக் கூடிய, சமையலறையில் இருக்கக்கூடிய அந்த மூன்று பொருட்கள் என்னென்ன தெரிந்துகொள்வோம் வாருங்கள். நெய், ஊறுகாய், பிரியாணி இலை. பெரும்பாலும் இந்த மூன்று பொருட்களை வடமாநிலத்தவர்கள் தங்களுடைய வீட்டில் நிறைவாக வைத்திருப்பார்கள். அதேசமயம் அந்த பொருட்களை அளவோடு தினம்தோறும் பயன்படுத்தியும் வருவார்கள் என்பதும் குறிப்பிடத்தக்க ஒரு விஷயம்.

உங்களுடைய வீட்டில் இந்த நெய் ஊறுகாய் பிரியாணி இலை மூன்றையும் முடிந்த வரை ஒரே அலமாரியில் வடக்கு திசையில் வைத்து பயன்படுத்த வேண்டும். தினசரி உணவில் நெய் சேர்த்துக் கொள்ளவேண்டும். தினசரி இறைவழிபாட்டில் நெய்தீபம் இருக்க வேண்டும். இது நம்முடைய வீட்டில் இருக்கும் வறுமையை தரித்திரத்தை விரட்டி அடிக்கும். இரண்டாவதாக ஊறுகாய். ஊறுகாய் செல்வச் செழிப்பை கொடுக்கக்கூடிய ஒரு பொருளாக சொல்லப்பட்டுள்ளது. அதேசமயம் இது குபேரருக்கு ரொம்பவும் பிடித்த பொருள் என்பது நாம் எல்லோரும் அறிந்த விஷயம் தான். குறிப்பாக நெல்லிக்காயில் செய்யப்பட்ட ஊறுகாய் எல்லோர் வீட்டிலும் கட்டாயமாக இருக்க வேண்டும். இந்த ஊறுகாயை அளவோடுதான் நான் பயன்படுத்த வேண்டும். காசு பணம் வேண்டும் என்பதற்காக ஊறுகாயை அளவுக்கு மீறி சாப்பிட்டால் அது பல உடல் உபாதைகளை கொடுத்துவிடும்.

உங்களால் நெல்லிக்காய்களை ஊறுகாயாக சாப்பிட முடியவில்லை என்றாலும், முழு நெல்லிக்காய்களை தேனில் ஊறவைத்து அல்லது வேறு ஏதாவது ஒரு வகையிலோ சமையலில் சேர்த்தும் சாப்பிட்டுக் கொள்ளலாம். ஜாடியில் ஊறுகாய் நிறைவாக இருக்கும் வீட்டில் வறுமை தங்காது. அடுத்தபடியாக பிரியாணி இலை. இந்த பிரியாணி இலையின் வாசத்திற்கு இயற்கையாகவே ஒரு குணம் உண்டு. பிரியாணி இலையில் இருந்து வெளிவரக்கூடிய வாசம் வீட்டில் இருப்பவர்களுக்கு மன நிம்மதியை கொடுக்கின்றது. மன அழுத்தத்தை போக்குகிறது. இதனால் வீட்டில் சண்டை சச்சரவுகள் வருவது தானாக குறைந்துவிடும். வீட்டில் நிம்மதி வந்துவிட்டாலே வீட்டிற்குள் வறுமை என்பது நுழையாது. சந்தோஷம் இருக்கும் வீட்டில் மகாலட்சுமி தானாகவே வந்து குடி கொள்வாள். பிரியாணி இலைகளை தினந்தோறும் சமையலில் அளவோடு பயன்படுத்தி வருவதால் நம்முடைய உடல் ஆரோக்கியத்திற்கு மிக மிக நல்லது. (தினமும் பிரியாணி இலைகளை சமையல் சேர்த்துக் கொள்ள முடியவில்லை என்றாலும், கொதிக்கின்ற தண்ணீரில் பிரியாணி இலையைப் போட்டு கொதிக்கவிட்டு, அந்த வாசம் உங்கள் வீடு முழுவதும் நிரம்பி இருக்கும் படி பார்த்துக் கொள்ளுங்கள்.) இதோடு மட்டுமல்லாமல் இந்த பிரியாணி இலையில் வேறொரு விஷயமும் அடங்கி உள்ளது. தினம்தோறும் ஒரு பிரியாணி இலையை எடுத்து, ஒரு கட்டி கற்பூரத்தை ஏற்றி, அந்த கற்பூரத்தில் இந்த பிரியாணி இலையை போட்டு பொசிக்கு விட வேண்டும். தினமும் எந்த வேண்டுதலை மனதில் நினைத்து, இந்த பிரியாணி இலையை உங்களுடைய வீட்டில் எரிக்கின்றீர்களோ அந்த பிரார்த்தனை, அந்த வேண்டுதல் 7 நாட்களில் பலிக்கும் என்றும் சொல்லப்பட்டுள்ளது. வீட்டில் இருக்கும் வறுமையும் கஷ்டமும் வீட்டை விட்டு வெளியே செல்ல வேண்டும். நிரந்தரமாக வீடு செல்வ செழிப்போடு இருக்கவேண்டும் என்று ஏழு நாட்கள் இந்த பிரியாணி இலைகளை உங்களுடைய வீட்டில் எரித்து தான் பாருங்களேன். நடக்கும் அதிசயத்தை.

Related Posts

Leave a Comment