நடிகை ஐஸ்வர்யா ராஜேஷிவிற்கு ஏற்பட்ட ஏமாற்றம் !

by Content Team
0 comment

கொரோனா பரவல் காரணமாக திரையரங்குகள் மூடப்பட்டு காணப்படுகின்றது. புதிய திரைப்படங்களை நேரடியாக OTT யில் வெளியிட்டு வருகின்றனர். அதே போல் சில திரைப்படங்களை தொலைக்காட்சியிலும் வெளியிட்டு வருகின்றனர்.

அந்த வகையில் தற்போது ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் வெளியான பூமிகா திரைப்படம் நேரடியாக தொலைக்காட்சியில் வெளியிடப்பட்ட உள்ளதாம்.வருகின்ற ஆகஸ்ட் மாதம் வெளியிடத் திட்டமிட்டுள்ளனர்.

கார்த்திக் சுப்புராஜ் தயாரித்துள்ள இப்படத்தை ரவீந்திரநாத் பிரசாத் இயக்கியுள்ளார். திரில்லர் கதையம்சம் கொண்ட இப்படத்திற்கு பிரதீப் சந்திரசேகர் இசை அமைத்துள்ளார்.

இது ஐஸ்வர்யா ராஜேஷின் 25வது திரைப்படம் ஆகும். தனது 25வது திரைப்படத்தை திரையரங்கில் வெளியிட்டு ரசிகர்களுடன் சேர்ந்து பார்க்க ஆசைப்பட்ட ஐஸ்வர்யா ராஜேஷிவிற்கு இது பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

Related Posts

Leave a Comment