ஆடி மாதம் அம்மன் கோவிலுக்கு இந்தப் பொருளை தானமாக வாங்கி கொடுங்கள். இந்த மாதம் முடிவதற்குள் நல்ல செய்தி நிச்சயம் வீடு தேடி வரும்.

by News Editor
0 comment

மனதார உண்மையான பக்தியோடு அம்பாளை வேண்டி என்ன வரங்களை கேட்டாலும் அது உடனடியாக கிடைத்துவிடும். இந்த உலகத்துக்கே தாயாக திகழ்பவள் தான் அம்பாள். அதில் எந்த சந்தேகமும் கிடையாது. எந்த மாற்றுக்கருத்தும் கிடையாது. இருப்பினும் இந்த ஆடி மாதம் அம்மனுடைய மனது மகிழ்ச்சியாக இருக்கும். கோவிலில் நடக்கும் திருவிழாக்கள், கூழ்வார்த்தல் நிகழ்ச்சி, அம்மனின் மனதை நிறைவாக வைத்திருக்கும். இந்த சமயத்தில் நாம் கேட்கும் வரங்களுக்கு நிச்சயமாக உடனடியாக இரட்டிப்பு பலன் கிடைக்கும் என்றும் சொல்லப்பட்டுள்ளது. ஆகவே, இந்த ஆடி மாதம் வரக்கூடிய செவ்வாய்க்கிழமை, வெள்ளிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமை, இந்த 3 தினங்களிலும் தொடர்ந்து அம்மன் கோவில்களுக்கு சென்று அம்மனை வழிபாடு செய்து வேண்டுதல் வைத்து தரிசனம் செய்யுங்கள். இதோடு சேர்த்து உங்களுடைய வேண்டுதல் நிறைவேற நீங்கள் சில பொருட்களை கோவிலுக்கு தானமாக வாங்கி கொடுக்கலாம்.

உங்களுடைய வீட்டில் இருப்பவர்களுக்கு திருமணமாகாமல் இருந்தாலும், அல்லது குழந்தைப்பேறு கிடைக்காமல் இருந்தாலும் வேலை வாய்ப்பு இல்லாமல் கஷ்டப்பட்டு கொண்டிருந்தாலும், இப்படி எந்த கஷ்டம் உங்கள் வீட்டில் இருந்தாலும் சரி, அந்த கஷ்டம் இந்த ஆடி மாதம் முடிவதற்குள் சரியாகிவிட வேண்டும் என்று அம்மனிடம் கோரிக்கை வைத்து, அம்பாளுக்கு மஞ்சள் குங்குமம் வளையல் கோவிலில் தீபம் ஏற்றுவதற்கு சுத்தமான நெய் அல்லது நல்லெண்ணெய் போன்ற பொருட்களை வாங்கி தானமாக கொடுக்க வேண்டும். கோவிலில் இருக்கும் அர்ச்சகரிடம் இந்த பொருட்களை எல்லாம் கொடுத்துவிட்டால், அம்பாளுக்கு அலங்காரம் செய்யும்போது அந்த பொருட்களை அவர்கள் பயன்படுத்திக் கொள்வார்கள். அதுமட்டுமல்லாமல் நீங்கள் கொடுத்த மஞ்சள் குங்குமத்தை கோவிலுக்கு வருகை தரும் சுமங்கலிப் பெண்களுக்கும், கோவிலிலிருந்து பிரசாதமாக கொடுப்பார்கள்.

இப்படி உங்கள் கையால் அம்மன் கோவில்களுக்கு நீங்கள் சில மங்களகரமான பொருட்களை வாங்கிக் கொடுக்கும் போது, அதன் மூலம் நல்ல பலன்களை பெற முடியும். உங்களுடைய வீட்டில் திருமணமாகாத கன்னிப் பெண்கள் திருமணத்திற்காக காத்துக் கொண்டிருந்தால், அந்த பெண்களை அழைத்துக்கொண்டு அம்மன் கோவில்களுக்கு செல்ல வேண்டும். ஒரு வெள்ளிக்கிழமை அன்று. ஒரு தாம்பாளத் தட்டில் 2 வெற்றிலை, 2 கொட்டைப்பாக்கு, 2 விரலி மஞ்சள், 1 ரூபாய் நாணயம், பூ, முடிந்தால் ஒரு வாழைப்பழம், ஒரு மஞ்சள் கயிறு, 2 வளையல், இந்த பொருட்கள் அனைத்தும் சேர்ந்தது ஒரு தாம்பூலம் ஆக தயார் செய்து வைத்துக்கொள்ளுங்கள். இந்தப் பொருட்கள் அனைத்தையும் திருமணமாகாத பெண்ணின் கையால், திருமணமான சுமங்கலிப் பெண்ணுக்கு தானம் கொடுக்க வேண்டும். திருமணமான சுமங்கலிப் பெண்கள் பதினோரு பேருக்கு இந்த தாம்பூலத்தை தானம் செய்தால் கூட போதுமானது. அடுத்த ஆடிமாதம் வருவதற்குள் நிச்சயமாக உங்களுடைய வீட்டில் கெட்டி மேள சத்தம் கேட்டே தீரும். முடிந்தால் இந்த தாம்புலத்தோடு உங்கள் கையால் ஏதாவது ஒரு பிரசாதத்தை செய்தும் அங்கு வரும் பக்தர்களுக்கு விநியோகம் செய்யலாம். அது உங்களுடைய வசதியைப் பொறுத்தது தான். மனதார கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு நாம் செய்யும் தானம், நம்முடைய மன நிறைவும் நம் வீட்டில் இருக்கக் கூடிய சுப காரிய தடைகளை நீக்கும். நம்பிக்கையோடு முயற்சி செய்தால் நிச்சயம் நல்ல பலனை பெற முடியும் என்ற கருத்தோடு இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

Related Posts

Leave a Comment