விஜய் டிவி முக்கிய பிரபலத்துடன் இணைந்து நடிக்கும் நடிகை வனிதா! அதுவும் யார்னு பார்த்தீர்களா! ஷாக்காகிடுவீங்க!!

by News Editor
0 comment

நடிகை வனிதா விஜயகுமார், நீயா நானா கோபிநாத்துடன் இணைந்து புதிய படத்தில் நடிக்க உள்ளார்.

ஜிவி பிரகாஷ் நடிப்பில் வெளிவந்த பென்சில் என்ற படத்தை இயக்கியதன் மூலம் பிரபலமான இயக்குனர் மணி நாகராஜ் தற்போது வாசுவின் கர்ப்பிணிகள் எனும் திரைப்படத்தை இயக்கி வருகிறார். இந்தப் படத்தை சேவியர் ப்ரிட்டோ தயாரிக்கிறார். இவர் விஜய் நடிப்பில் வெளிவந்த மாஸ்டர் திரைப்படத்தை தயாரித்தவர்.

ஒரு டாக்டர் மற்றும் 4 கர்ப்பிணிப் பெண்களை மையமாகக்கொண்டு இந்த படம் உருவாக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது. இந்த படத்தில் டாக்டர் கதாபாத்திரத்தில் நீயா நானா கோபிநாத் நடிக்கிறார். மேலும் அவருக்கு மனைவியாக மலையாள நடிகை லீனாகுமார் நடிக்கவுள்ளார். மேலும் அனிகா, சீதா, வனிதா விஜயக்குமார் மற்றும் புதுமுக நடிகை க்ரிஷிகா ஆகியோர் 4 முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளனர்.

16 முதல் 50 வயது பெண்கள் வரை சந்திக்கும் பிரச்சினைகள் கொண்டு இப்படம் உருவாக உள்ளதாம். இன்னும் ஒரு சில காட்சிகளே எடுக்கப்பட உள்ளதாகவும், அடுத்த வார இறுதியில் படப்பிடிப்பு தொடங்கும் எனவும் இயக்குனர் மணி நாகராஜ் தெரிவித்துள்ளார். இப்படத்திற்கு விஷ்ணு மோகன் இசையமைக்கவுள்ளார். இந்நிலையில் வனிதாவிற்கு ரசிகர்கள் வாழ்த்து கூறி வருகின்றனர்

Related Posts

Leave a Comment