நயன்தாரா இருந்தால் நன்றாக இருக்கும் என தூதுவிட்ட மூத்த நடிகர்!

by Content Team
0 comment

‘வாழ்க்கை என்பது வட்டம்டா’ என்ற தளபதி திருமலை திரைப்பட வசனம் யாருக்கு பொருந்துகிறதோ இல்லையோ இது நயன்தாராவுக்கு பொருத்தமாக இருக்கின்றது. நடிகை நயன்தாரா சினிமாவின் புகழின் உச்சிக்கு சென்றாலும் சொந்த வாழ்க்கையில் நிறைய கோட்டை விட்டு விட்டார்.

படத்தில் ஒரு கட்டத்தில் சினிமாவை விட்டு விலகி இல்லற வாழ்க்கையில் இணைய இருந்த நயன்தாரா சில காரணத்தால் நயன்தாரா மீண்டும் சினிமாவில் இணைந்தார். ஆரம்பம் கொஞ்சம் குழப்பமாகத்தான் இருந்தது. போதாக்குறைக்கு சர்ச்சை நடிகை என்றும் பெயர் வாங்கினார். இதன் காரணமாக முன்னணி நடிகர் ஒருவரின் படத்தில் நடிக்க இவர் பெயர் அப்போது சிபாரிசு செய்யப்பட்டது.

ஆனால், நயன்தாரா அவர் எல்லாம் வேண்டாம் ஏற்கனவே பெயர் கெட்டு போய் இருக்கின்றது. அது நம்முடைய படத்திற்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தும் என கூறிவிட்டாராம். ஆனால் தற்போது அடுத்ததாக அவர் படத்துக்கு நயன்தாரா இருந்தால் நன்றாக இருக்கும் என தூதுவிட்டு இருக்கிறாரா அந்த மூத்த நடிகர்.

Related Posts

Leave a Comment