உதயநிதியின் திரைப்படத்தில் பிக்பாஸ் ஆரவ் !

by Content Team
0 comment

தயாரிப்பாளராக இருந்த உதயநிதி ஸ்டாலின் பின்னர் முழுநேர நடிகராக மாறி தமிழ் திரைப்படங்களில் நடித்து வருகின்றார். அதன்பின் எம். எல். ஏ ஆக வெற்றி பெற்று அரசியலில் கவனம் செலுத்தி வந்தார்.

உதயநிதி தற்போது மீண்டும் சினிமாவிற்கு திரும்பி இருக்கிறார். மகிழ்திருமேனி இயக்கத்தில் உதயநிதி கதாநாயகனாக நடித்து வருகிறார். இப்படத்தில் நிதி அகர்வால் அவருக்கு ஜோடியாக நடிக்கின்றார்.

இந்நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் டைட்டில் வெற்றியாளர் ஆரவ் இப்படத்தில் இணைந்து நடிக்கின்றார். படப்பிடிப்பில் உதயநிதியுடன் ஆரவ் இணைந்து எடுத்த புகைப்படத்தை தனது சமூக வலைதளங்களில் பகிர்ந்து இருக்கின்றார்.இதுதொடர்பான புகைப்படம் இணையதளத்தில் வைரலாக பரவி வருகிறது.

Related Posts

Leave a Comment