மும்பை பங்குச் சந்தையில் அதானி நிறுவனத்தின் பங்குகள் 5% வீழ்ச்சி !

by Content Team
0 comment

பிரபல தொழிலதிபரான கவுதம் அதானியின் நிறுவனங்களில் செபி மற்றும் வருவாய் புலனாய்வு இயக்குனரகம் திடீர் ஆய்வு நடத்தியதன் விளைவாக அவர் இந்நிறுவனத்தின் பங்குகள் கடும் சரிவை சந்தித்துள்ளது.

கௌதமனின் ஆறுக்கும் மேற்பட்ட நிறுவனங்களில் பங்கு ஒழுங்குமுறை விதிகள் மீறல் புகார் எழும்பியுள்ளது.இதைத்தொடர்ந்து அவருக்கு சொந்தமான நிறுவனங்கள் அரசு நிறுவனங்களான அதானி என்டர்பிரைசஸ், அதானி டிரான்ஸ்மிஷன், அதானி டோட்டல் கேஸ், அதானி துறைமுகம் மற்றும் அதானி எரிசக்தி நிறுவனங்களில் ஆய்வு நடத்தப்பட்டு வருகின்றது.

இந்த ஆய்வை இந்திய பங்கு மற்றும் பரிவர்த்தனை வாரியம் என அழைக்கப்படும் செபி மற்றும் வருவாய் புலனாய்வு இயக்குனரகம் மேற்கொண்டு வருவதாக ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது. இந்த தகவலை ஒன்றிய நிதித்துறை இணை அமைச்சர் பங்கு சவுத்ரி தெரிவித்துள்ளார். இந்த நிறுவனங்களில் அமலாக்கத் துறையினர் ஆய்வு செய்யவில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.

இந்த தகவலால் மும்பை பங்குச் சந்தையில் அதானி நிறுவனத்தின் பங்குகள் 5% வீழ்ச்சி அடைந்தன. இன்று மும்பை பங்கு சந்தை 587 புள்ளிகள் நஷ்டத்துடன் நிறைவடைந்துள்ளது. இதனால் அந்த அதானி உள்ளிட்ட முதலீட்டாளர்களுக்கு மொத்தம் 1.20 லட்சம் கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளது.

Related Posts

Leave a Comment