நடிகர் கார்த்தியின் சர்தார் படப்பிடிப்பிற்கு நேரில் சென்று சர்ப்ரைஸ் கொடுத்துள்ள விஜய்!

by Lifestyle Editor
0 comment

நடிகர்கள் விஜய் மற்றும் கார்த்தி இருவரும் ஒருவரையொருவர் நேரில் சந்தித்துக் கொண்டதாக கூறப்படுகிறது.

விஜய் தற்போது நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் பீஸ்ட் படத்தில் நடித்து வருகிறார். அந்தப் படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கின்றனர். பூஜா ஹெக்டே இசையமைக்கிறார்.

ஜார்ஜியாவில் பீஸ்ட் படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு நிறைவடைந்ததை அடுத்து தற்போது சென்னையில் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு மும்முரமாக நடைபெற்று வருகிறது. பீஸ்ட் படத்தின் படப்பிடிப்பு தற்போது சென்னை கோகுலம் ஸ்டுடியோவில் நடைபெற்று வருகிறது.

மேலும் கார்த்தி நடிப்பில் பிஎஸ் மித்ரன் இயக்கத்தில் உருவாகி வரும் ‘சர்தார்’ படத்தின் படப்பிடிப்பும் அதே கோகுலம் ஸ்டுடியோவில் தான் நடைபெற்று வருகிறது. எனவே விஜய் சர்தார் படப்பிடிப்பிற்குச் சென்று கார்த்தியை நேரில் சந்தித்து உரையாடியுள்ளாராம். மேலும் நடிகர் கார்த்திக்கு விஜய் வாழ்த்துக்களும் தெரிவித்தாகக் கூறப்படுகிறது.

இருவரது நடிப்பில் உருவாகி வரும் படங்களுக்கும் கோலிவுட்டில் பெரும் எதிர்பார்ப்பு நிலவி வருவது குறிப்பிடத்தக்கது.

Related Posts

Leave a Comment