லக்ஷ்மி கணபதி மந்திரம்

by Lifestyle Editor
0 comment

இக்காலத்தில் பணம் இல்லாமல் எவரும் எந்த ஒரு காரியத்தையும் செய்ய இயலாத ஒரு நிலைதான் இருக்கிறது. அப்படிப்பட்ட பணம் சம்பாதிப்பதற்கு ஒருவருக்கு செல்வ மகளான லட்சுமியின் கடாட்சமும், எதையும் எதிர்த்து சாதனை புரியு செய்யும் விநாயகப் பெருமானின் அருளும் வேண்டும். இந்த இரண்டும் சேர்ந்தவாறு இருப்பவர் தான் ஸ்ரீலட்சுமி கணபதி. அந்த கணபதியின் மந்திரத்தை உச்சரிப்பதால் நமக்கு எவ்வளவு நன்மைகள் என்ன என்பதைப் பார்ப்போம்.

ஸ்ரீலட்சுமி கணபதி மந்திரம்: ஓம் ஸ்ரீம்கம் சௌம்யாய லட்சுமி கணபதயே, வரவரத சர்வதனம்மே வசமானய ஸ்வாஹா

லட்சுமி தேவியின் அனுகிரகம் நிறைந்த விநாயகப் பெருமானின் மந்திரம் இது. இந்த மந்திரத்தை தினமும் காலையில் எழுந்து குளித்து முடித்து விட்டு விநாயகரையும், லட்சுமி தேவியை மனதில் நினைத்தவாறே 108 முறை ஜெபிக்க வேண்டும். செவ்வாய் மற்றும் வெள்ளி கிழமைகளில் விநாயகர் மற்றும் லட்சுமி படத்திற்கு தீபமேற்றி,இந்த மந்திரத்தை 108 முறை முதல் 1008 முறை வரை ஒரு ஜெபிப்பதால் உங்களுக்கு லட்சுமி கடாட்சம் உண்டாகும். வருமானம் பெருகும். வீண் செலவுகள் ஏற்படாது. செல்வ சேமிப்பு உயரும். நீங்கள் எண்ணிய காரியங்கள் அனைத்தும் ஈடேறும்.

நமது கலாசாரத்தில் எந்த ஒரு காரியத்தையும் தொடங்குவதற்கு முன்பு ஸ்ரீ விநாயகப் பெருமானை வழிபட்டு அக்காரியத்தை தொடங்குவதே மரபாகும். அந்த விநாயகனை வழிபட்டால் எல்லா நன்மைகளும் வந்து சேரும் என்பது ஐதீகம். அதிலும் செல்வ மகளான லட்சுமி தேவியின் தாத்பரியம் நிறைந்த ஸ்ரீலட்சுமி கணபதிகுரிய இம்மந்திரத்தை தினமும் திட சித்தத்தோடு துதிப்பவர்களுக்கு அனைத்து நன்மைகளும் உண்டாகும்.

Related Posts

Leave a Comment