மூல் சாகர், ஜெய்சல்மேர்

by Lifestyle Editor
0 comment

ஜெய்சல்மேரிலிருந்து 8 கி.மீ தூரத்திலுள்ள மற்றொரு பிரசித்தமான சுற்றுலா அம்சம் இந்த மூல் சாகர் ஆகும்.

சாம் மணற்குன்றுகளுக்கு செல்லும் சாலையில் இது அமைந்துள்ளது.

ஒரு அழகிய தோட்டம் மற்றும் தடாகத்தை உள்ளடக்கிய இந்த ஸ்தலம் அக்காலத்தில் ராஜ குடும்பத்தினர் கோடைக்காலத்தில் விஜயம் செய்து ஓய்வெடுக்கும் இடமாக திகழ்ந்துள்ளது.

இத்தோட்டத்தினுள் ஒரு சிவன் கோயிலையும் பயணிகள் காணலாம்.

இக்கோயில் இரண்டு பெரிய மணற்பாறைகளால் உருவாக்கப்பட்டுள்ளது.

இரண்டாம் மஹரவால் மூல்ராஜ் இந்த மூல் சாகர் வளாகத்தை 1818ம் ஆண்டில் உருவாக்கியுள்ளார்.

இத்தோட்டத்தின் உள்ளேயே பல கிணறுகள், ஒரு ராஜ் மஹால் மற்றும் எல்லா ஜெயின் தீர்த்தங்கரர்களுக்காகவும் உருவாக்கப்பட்டுள்ள மூன்று ஜெயின் கோயில்கள் போன்ற அம்சங்களையும் பயணிகள் பார்க்கலாம்.

இங்குள்ள அரண்மனை பலவிதமான ஓவியங்கள் மற்றும் சுவர்சித்திரங்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளது.

ஜெய்சல்மேர் நகரிலிருந்து ஆட்டோ ரிக்ஷா மூலம் பயணிகள் இந்த மூல சாகருக்கு வருகை தரலாம்.

Related Posts

Leave a Comment