கல்வி கட்டணத்தில் தனியார் பள்ளிகளுக்கு செக் வைத்த தமிழக அரசு… மகிழ்ச்சியில் பெற்றோர்கள்!!

by Lifestyle Editor
0 comment

தனியார் பள்ளிகள் முதல் தவணையாக 40 சதவீதம் கட்டணம் மட்டுமே வசூல் செய்ய வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.

தமிழகத்தில் கொரோனா காரணமாக கடந்த ஓராண்டுக்கு மேலாக பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டுள்ளன. தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலை கடந்த ஏப்ரல் மாதம் முதல் தீவிரமான நிலையில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு தகவல் அளிக்கப்பட்டு வருகிறது. தற்போது கொரோனா குறைந்து வரும் நிலையில் மீண்டும் பள்ளிகள் திறக்க தமிழக அரசு ஆலோசித்து வருகிறது. இருப்பினும் மாணவர்கள் நலன் கருதி கல்வி தொலைக்காட்சி மற்றும் ஆன்லைன் வகுப்புகள் மூலம் தொடர் வகுப்புகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

இந்த சூழலில் ஒரு சில தனியார் பள்ளிகள் கல்விக் கட்டணம் கேட்டு மாணவர்களை வற்புறுத்தி வருவதாக புகார்கள் குவிந்த நிலையில் பள்ளிக்கல்வித் துறை ஆணையர் நந்தகுமார் அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். அதில், “நடப்பு கல்வி ஆண்டில் பள்ளிகள் கட்டண வசூல் செய்யப்படுவதாக புகார்கள் எழுந்து வருகின்றன. இதனால் தனியார் பள்ளிகள் தமிழகத்தில் 75% மட்டும் கல்வி கட்டணம் வசூல் செய்ய வேண்டும். இதில் முதல் தவணையாக 40 சதவீதத்தை ஆகஸ்ட் 31-ஆம் தேதிக்குள் வசூல் செய்து கொள்ளலாம். அதே போல் மீதமுள்ள 35 சதவீதம் கட்டணத்தை நேரடி வகுப்புகள் தொடங்கிய பின்னர் இரண்டு மாதங்களில் வசூல் செய்யலாம். மீதமுள்ள 25% கட்டணங்களை வசூல் செய்வது குறித்து கொரோனா நிலைமையை பொருத்து அறிவிக்கப்படும் என்று குறிப்பிட்டுள்ளார். தமிழக அரசின் இந்த உத்தரவினால் பெற்றோர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

Related Posts

Leave a Comment