வெறும் ஒரு மணி நேரம் பெய்த மழை.. அதுக்கே மூழ்கிய சாலைகள்.. சிங்கார சென்னை 2.0வில் தீர்வு காணப்படுமா?

by Lifestyle Editor
0 comment

சென்னை: சென்னையில் ஒரு நாள் பெய்த மழைக்கே சாலைகளில் தண்ணீர் தேங்கியுள்ளது.

சென்னையில் கடந்த இரு தினங்களாக மாலை நேரங்களில் மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் சாலைகளில் தண்ணீர் தேங்கியுள்ளது குறித்த வீடியோக்கள் சமூகவலைதளங்களில வைரலாகி வருகின்றன.

ஒவ்வொரு முறையும் மக்கள் இந்த தேங்கிய மழை நீரால் அவதியடைகிறார்கள். தற்போது சிங்கார சென்னை 2.0 திட்டத்தில் இதற்கு நிரந்தர தீர்வு காணப்பட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஒரு மணி நேரம் அடைமழை

நேற்று சென்னையில் ஒரு மணி நேரம் அடைமழை பெய்தது. அதற்கே அண்ணா நகரில் சாலையில் தேங்கிய மழைநீர்.

அடைமழை

சென்னையில் பெய்த அடை மழையால மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு.

அடைமழையால் நிரம்பிய ஏரிகள்

சென்னையில் கடந்த இரு தினங்களாக பெய்து வரும் அடைமழையால் ஏறக்குறைய நிரம்பிய நிலையில் கிணறு.

பயங்கர மழை

சென்னையில் பயங்கர சப்தத்துடன் இடி, மின்னலுடன் பெய்த மழை.

தண்ணீரில் தத்தளிப்பு

ஒரு மணி நேரம்தான் மழை பெய்தது. அதற்கே சென்னை நகரம் தண்ணீரில் தத்தளிக்கிறது.

Related Posts

Leave a Comment