‘ஓம்’ மந்திரம் சொல்வதன் பலன்கள்!

by Lifestyle Editor
0 comment

புனிதமான ஓம் மந்திரம் சொல்வது உங்களின் உடல், மனம், மெய்யியல் வாழ்வில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்துகிறது. ஓம் மந்திரம் மறைவான ஆற்றலை நமக்கு அளிக்கிறது. சரியான முறையில் ஓம் மந்திரத்தை உச்சரித்து வந்தால் உடலில் பல்வேறு மாற்றங்கள் ஏற்படும். ஓம் ஒலியின் அதிர்வு உடலையும் மனதையும் வலிமையானதாக மாற்றும்.

ஓம் மந்திரம் சொல்லப்படும் உடலில் உள்ள நச்சுக்கள் வெளியேற்றப்படுகின்றன. இதனால் உடல் புத்தம் புதியதாக, புத்துணர்வு மிக்கதாக மாறுகிறது.

நேர்மறை அதாவது ஆக்கப்பூர்வ அதிர்வுகள் ஏற்படுகின்றன. நம்மைச் சுற்றியுள்ள எதிர்மறை விஷயங்கள் மறைகின்றது.

நம்மைச் சுற்றியுள்ள ‘ஆரா’ எனும் ஒளி வட்டம் தூய்மையாகின்றது

ஓம் நம்மை தியான நிலைக்கும் அதைத் தொடர்ந்து ஆழ்நிலை தியான நிலைக்கும் கொண்டு செல்லும்.

ஆழ்நிலை தியான நிலைக்கு செல்வதன் மூலம் கவனச் சிதறல் மறைகிறது. நம்முடைய இலக்கை அடையவும், கவனம் அதிகரிக்கவும் தூண்டுகிறது.

தெளிவின்மை மறைந்து, தெளிவு பிறக்கிறது.

பலர் சேர்ந்து குழுவாக ஓம் மந்திரத்தினை உச்சரிக்கும் போது நிறைந்த சக்தி அவ்விடத்தில் உருவாகின்றது.

செரிமான மண்டலத்தின் செயல் திறனை அதிகரிக்கிறது. செரிமான மண்டலத்தில் உள்ள நச்சுக்கள் வெளியேறத் தூண்டுகிறது.

உணவில் கவனம் அதிகரிக்கிறது. செரிமானம் தூண்டல் உள்ளிட்ட காரணிகளால் உடலில் உள்ள தேவையற்ற கொழுப்பு கரைகிறது.

உடலில் உள்ள நச்சுக்கள் நீங்குவதால் சருமம் பொலிவு அடைகிறது.

தண்டு வடம் நிமிர்ந்து உறுதித் தன்மை பெறுகின்றது.

ஓம் உச்சரிப்பினைக் கேட்டால் கூட அட்ரினல், கார்டிசோல் போன்ற மன அழுத்தம், பதற்றத்தை அதிகரிக்கச் செய்யும் ஹார்மோன்களின் அளவு குறைகிறது.

கொழுப்பு அளவு குறைகின்றது. இதயத்தின் ஆரோக்கியம் அதிகரிக்கிறது.

இதய துடிப்பு சீராகிறது.

உயர் ரத்த அழுத்தம் கட்டுப்படுகின்றது.

மனநிலை சீராவதால் ஒருவரின் சொல், செயல், நடத்தை என அனைத்தும் பண்பட்டதாக மாறுகிறது.

மன அழுத்தம் குறைவதால் ஆழந்த தூக்கம் வருகிறது. ஆழ்ந்த தூக்கமே நம்முடைய உடலில் உள்ள பல்வேறு வியாதிகளை போக்குவதாக அமைகிறது.

உடல் தன்னைத் தானே சரி செய்து கொள்ள தூண்டப்படுகிறது.

உடலும், மூட்டுகளும் மென்மையானதாக இருக்கின்றன.

Related Posts

Leave a Comment