20 ஆண்டுக்கு பின் அமெரிக்காவில் ஒருவருக்கு மங்கி பாஸ் நோய் பாதிப்பு!

by News Editor
0 comment

அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் வசிக்கும் ஒருவர் நைஜீரியா நாட்டில் இருந்து அமெரிக்காவுக்கு வந்துள்ளார்.

இந்த நிலையில், அவருக்கு காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டு பரிசோதனை செய்ததில், மங்கிபாக்ஸ் வைரசின் பாதிப்பு அவருக்கு ஏற்பட்டு இருப்பது தெரியவந்துள்ளது.

மேலும், இதுகுறித்து அமெரிக்க நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் வெளியிட்டுள்ள செய்தியில் பாதிப்பு ஏற்பட்ட நபர் டல்லாஸ் நகரில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

அவர் லாகோஸ் நகரில் இருந்து, நைஜீரியா, டல்லாஸ் என பயணம் செய்து வந்துள்ளார். அவருடன் விமான பயணம் செய்த பயணிகளை தொடர்பு கொள்ளும் பணியில் சுகாதார அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர் என தெரிவித்து உள்ளது.

இந்த வைரசானது தொடக்கத்தில் காய்ச்சல் பாதிப்பு ஏற்படுத்தும். அதன்பின், சிறிய கட்டிகள் போன்ற வீக்கம் ஏற்படுத்தும். மேலும், முகம் மற்றும் உடல் முழுவதும் பரவும். 2 முதல் 4 வாரங்கள் வரை நீடிக்கும்.

பெரியம்மை உடன் தொடர்புடைய இந்த பாதிப்பு, அரிய நிகழ்வு என்றாலும், தீவிர நோய் தன்மை ஏற்படுத்த கூடியது என்று அந்த மையம் தெரிவித்து உள்ளது.

Related Posts

Leave a Comment