கடைசி ஆசை நிறைவேறாமலே உயிரிழந்த குட்டி ரசிகை! கண்கலங்க வைத்து பிக்பாஸ் ஆரி வெளியிட்ட பதிவு!

by News Editor
0 comment

தனக்கு தொடர்ந்து வாக்களித்து வெற்றி பெறச் செய்த சிறுமி உயிரிழந்த நிலையில் அவருக்கு இரங்கல் தெரிவித்து ஆரி வெளியிட்ட பதிவு அனைவரையும் கண்கலங்க வைத்துள்ளது.

பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் கலந்துகொண்டு தனது நேர்மையான, வெளிப்படையான பேச்சால் ரசிகர்களை பெருமளவில் கவர்ந்து வெற்றி பெற்றவர் நடிகர் ஆரி அர்ஜுனன். பிக்பாஸ் நிகழ்ச்சியால் இவருக்கு சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை ஏராளமான ரசிகர்கள் பட்டாளமே உருவாகினர்.

இந்நிலையில் ஆரி பிக்பாஸ் வீட்டில் இருந்தபோது அவரது தீவிர ரசிகையாக இருந்த சிறுமி ருத்ரா தொடர்ந்து தவறாமல் வாக்களித்து வந்துள்ளார். குழந்தை ருத்ரா முதுகு தண்டுவடத்தில் அரிய வகை பாதிப்பு ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்துள்ளார். ஆனால் சிகிச்சை பலனின்றி அவர் தற்போது உயிரிழந்துள்ளார்.


இந்நிலையில் இதுகுறித்து ஆரி தன் டுவிட்டர் பக்கத்தில், குழந்தை ருத்ராவின் அன்பு எனக்கு கிடைத்த வரம். குழந்தையின் மறைவு செய்தி கேட்டு பேரதிர்ச்சி அடைந்தேன். அவர்களது குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். உன் சுவாசம் நின்று விட்டாலும், என் சுவாசம் உள்ளவரை நினைவில் கொள்வேன் என உருக்கமாக பதிவிட்டுள்ளார்.

அந்தப் பதிவிற்கு கீழ் ருத்ராவின் தாய் சந்தியா அவள் உங்களோட தீவிர ரசிகை. உங்களை நேரா பார்த்திருந்தா ரொம்ப சந்தோஷமா இருந்திருப்பா.. இப்ப சொர்க்கத்துல ஹேப்பியா இருப்பா என தெரிவித்துள்ளார். இதனை கண்ட நெட்டிசன்கள் பலரும் அவருக்கு ஆறுதல் கூறி வருகின்றனர்.

Related Posts

Leave a Comment