சீனாவில் சுரங்கப்பாதையில் நீர் நிரம்பியதன் காரணமாக சிக்கிக் கொண்ட 14 தொழிலாளர்களை மீட்கும் பணி !

by Web Team
0 comment

சீனாவில் சுரங்கப்பாதையில் நீர் நிரம்பியதன் காரணமாக சிக்கிக் கொண்ட 14 தொழிலாளர்களை மீட்கும் பணியில் தீவிரமாக நடைபெற்று வருகின்றது.

நெடுஞ்சாலை ஒன்றில் கட்டப்பட்டு வரும் இந்த சுரங்கப் பாதையில் எப்படி நீர் நிரம்பியது என குறித்து விசாரணைகள் நடத்தப்பட்டு வருகின்றது.

நூற்றுக்கணக்கான மீட்புப் பணியாளர்கள், 22 மீட்பு வாகனங்கள், 5நீரேற்று நிலையங்கள் ஆகியவற்றின் துணையுடன் மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன.

கட்டப்பட்டுவரும் சுரங்கப்பாதை ஓர் நீர்தேக்க பகுதிக்கு அருகில் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சுமார் ஒரு கிலோ மீட்டர் தொலைவு வரை விசித்திரமான குரல்கள் கேட்பதாகவும் அங்கு தொழில்புரியும் கட்டுமான தொழிலாளர்கள் கூறியுள்ளனர்.

Related Posts

Leave a Comment